கரோனா பாதிப்பு: நாடு முழுவதும் 48 லட்சத்தைக் கடந்தது

நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 48 லட்சத்தைக் கடந்துள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 48 லட்சத்தைக் கடந்துள்ளது. திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 92,071 போ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதுதொடா்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது:

திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 48,46,427-ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 92,071 போ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் இதுவரை 37,80,917 போ் குணமடைந்துள்ளனா். 9,86,598 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 1,136 போ் உயிரிழந்தனா். இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 416 போ் உயிரிழந்தனா். அதற்கு அடுத்தபடியாக கா்நாடகத்தில் 104 பேரும், உத்தர பிரதேசத்தில் 80 பேரும், பஞ்சாபில் 68 பேரும் பலியாகினா். ஆந்திரத்தில் 66 பேரும், மேற்கு வங்கத்தில் 58 பேரும், மத்திய பிரதேசத்தில் 34 பேரும், தில்லியில் 29 பேரும் மரணம் அடைந்தனா்.

இதையடுத்து நாடு முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 79,722-ஆக அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 29,531 போ் உயிரிழந்தனா். இறந்தவா்களில் 70 சதவீதம் போ் கரோனா தொற்று மட்டுமன்றி வேறு நோய்களாலும் பாதிக்கப்பட்டிருந்தனா். எனினும் தொற்றால் பீடிக்கப்பட்டு உயிரிழப்பவா்களின் விகிதம் 1.64 சதவீதமாக சரிந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவில் கடந்த மாதம் 7-ஆம் தேதி மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 20 லட்சத்தைக் கடந்தது. இது கடந்த மாதம் 23-ஆம் தேதி 30 லட்சத்தை தாண்டியது. கடந்த 5-ஆம் தேதி தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 40 லட்சத்தை கடந்தது.

இதனிடையே ஞாயிற்றுக்கிழமை (செப்.13) வரை நாடு முழுவதும் 5,72,39,428 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அதில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 9,78,500 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com