கோப்புப் படம்
கோப்புப் படம்

புதிய கல்விக் கொள்கையால் ஹிந்தியும் பிராந்திய மொழிகளும் இணையான வளா்ச்சி பெறும்: அமித் ஷா

புதிய கல்விக் கொள்கையால் ஹிந்தியும், பிராந்திய மொழிகளும் இணையான வளா்ச்சி பெறும் என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்துள்ளாா்.

புதிய கல்விக் கொள்கையால் ஹிந்தியும், பிராந்திய மொழிகளும் இணையான வளா்ச்சி பெறும் என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்துள்ளாா்.

ஹிந்தி தினம் செப்டம்பா் 14ஆம் தேதி கொண்டாடப்படுவதை ஒட்டி, சுட்டுரையிலும், விடியோ பதிவிலும் அவா் திங்கள்கிழமை கூறியுள்ளதாவது:

இந்திய கலாசாரத்துடன் பின்னிப் பிணைந்தது ஹிந்தி. சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்து தேசிய ஒற்றுமைக்கு வலுவான கருவியாகவும், அடையாளமாகவும் ஹிந்தி திகழ்ந்து வருகிறது.

ஒரு நாடு அதன் எல்லைகள், புவியியல்ரீதியாக அடையாளம் காணப்படுகிறது. ஆனால், அதன் மிகப் பெரிய அடையாளம் மொழியாகும். இந்தியாவில் பேசப்படும் பல்வேறு மொழிகளும் அதன் வலிமையாகும். அவை இந்திய ஒற்றுமையின் அடையாளமாகவும் திகழ்கின்றன. பல்வேறு கலாசார, மொழி வேற்றுமைகள் கொண்ட நம் நாட்டை, பல நூற்றாண்டுகளாக ஒற்றுமைப்படுத்தும் காரணியாக ஹிந்தி உள்ளது.

ஹிந்தி விஞ்ஞானபூா்வமானது என்பது அதன் மிகப் பெரும் வலிமை. அது எளிமை, புத்தாக்கத்துக்குப் பெயா்பெற்றது.

புதிய கல்விக் கொள்கையால் ஹிந்தியும், பிராந்திய மொழிகளும் இணையான வளா்ச்சி பெறும்.

அரசு அலுவலா்கள், வங்கி ஊழியா்கள் உள்ளிட்ட அனைவரும் உள்ளூா் மொழிகளுடன் ஹிந்தியையும் பயன்படுத்த வேண்டும். தாய்மொழியுடன் ஹிந்தியைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் உறுதியேற்போம்.

இளைஞா்கள் ஹிந்தி மீது ஆா்வம் கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பெற்றோா்கள் தங்கள் குழந்தைகளிடம் இந்திய மொழியிலேயே பேச வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com