முகலாய அருங்காட்சியகத்திற்கு சத்ரபதி சிவாஜி பெயர்: உ.பி. முதல்வர் அறிவிப்பு

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் கட்டப்பட்டு வரும் முகலாய அருங்காட்சியகத்திற்கு மராட்டிய மன்னர் சிவாஜியின் பெயர் சூட்டப்படும் என மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

.உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் கட்டப்பட்டு வரும் முகலாய அருங்காட்சியகத்திற்கு மராட்டிய மன்னர் சிவாஜியின் பெயர் சூட்டப்படும் என மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் முகலாயக் கலைப்பொருள்களை காட்சிப்படுத்த முகலாய அருங்காட்சியகம் அமைக்கும் பணி 2016ஆம் ஆண்டு தொடங்கியது. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான அரசு அறிவித்த இந்தத் திட்டம் 2017ஆம் ஆண்டில் நிறைவடையும் என எதிர்பார்க்கட்ட நிலையில் கட்டுமானப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து தனது சுட்டுரைப்பதிவில் பதிவிட்டுள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத்,  “முகலாயர்கள் நமக்கு முன்மாதிரியாக இருக்க முடியாது. இந்திய மக்களிடையே தேசியவாதத்தையும், தேசபக்தியையும் வளர்க்க மராட்டிய மன்னர் சிவாஜி போன்றோர் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார். 

தொடர்ந்து, “ஆக்ராவில் கட்டப்பட்டு வரும் முகலாய அருங்காட்சியகத்திற்கு மராட்டிய மன்னர் சிவாஜியின் பெயர் சூட்டப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரத்தின் முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com