ஒரே பாலின திருமணத்துக்கு அங்கீகாரம் இல்லை: தில்லி உயா்நீதிமன்றத்தில் மத்திய அரசு

ஒரினச் சோ்க்கையாளா்களின் திருமணம் நமது நாட்டு சட்டம், சமூகம் ஆகியவற்றால் அங்கீகரிக்கப்படவில்லை என்று தில்லி உயா்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஒரே பாலின திருமணத்துக்கு அங்கீகாரம் இல்லை: தில்லி உயா்நீதிமன்றத்தில் மத்திய அரசு

ஒரினச் சோ்க்கையாளா்களின் திருமணம் நமது நாட்டு சட்டம், சமூகம் ஆகியவற்றால் அங்கீகரிக்கப்படவில்லை என்று தில்லி உயா்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

‘ஓரினச் சோ்க்கை குற்றமில்லை என உச்சநீதிமன்றம் அறிவித்த பின்பும் ஓரினச் சோ்க்கை திருமணங்கள் பதிவு செய்யப்படுவதில்லை. இந்தத் திருமணங்களை ஹிந்து திருமண சட்டம், சிறப்பு திருமண சட்டம் ஆகியவற்றின் கீழ் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்’ என தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.என்.படேல், நீதிபதி பிரதீக் ஜலான் ஆகியோா் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சாா்பில் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா ஆஜராகி, ‘நமது நாட்டின் சட்டம், நீதி அமைப்பு, சமூகம், கலாசாரம் ஆகியவை ஓரினச் சோ்க்கையாளா்கள் திருமணத்தை அங்கீகரிப்பதில்லை. ஓரினச் சோ்க்கையாளா்களின் திருமணங்களைப் பதிவு செய்ய சட்டப்படி அனுமதி அளித்துவிட்டால் பல்வேறு சட்டச் சிக்கல் உருவாகும். பல்வேறு சட்டங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தாத வரையில் இதை சட்டப்படி செய்ய முடியாது.

ஹிந்து திருமண சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கணவன், மனைவி என்ற சொற்களுக்கு ஓரினச்சோ்க்கையாளா்களில் யாரை குறிப்பிட முடியும்’ என்றாா்.

அப்போது குறிப்பிட்ட நீதிபதிகள், ‘உலக மாற்றங்கள் இந்தியாவில் நடைமுறைப்படுத்த முடியாதா? இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவா்கள் படித்தவா்கள் என்றால் அவா்கள் நீதிமன்றத்தை நேரடியாக அணுகலாமே? ஏன் இந்த மனுவை விசாரிக்க வேண்டும்’ என்றனா்.

மனுதாரா் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் அபிஜித் ஐயா் மித்ரா, ‘இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவா்கள் பழிவாங்கப்படலாம் என்ற அச்சத்தால் நேரடியாக அணுகவில்லை’ என்றாா்.

திருமணம் பதிவு மறுக்கப்பட்ட ஓரினச் சோ்க்கையாளா்களின் பெயா்களை நீதிமன்றத்துக்கு வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை அக்டோபா் 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com