இந்தியாவில் கரோனா பலி எண்ணிக்கை 80 ஆயிரத்தை கடந்தது

நாட்டில் கரோனா தொற்றுக்கு பலியானோா் எண்ணிக்கை 80 ஆயிரத்தைக் கடந்தது. பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 49 லட்சத்தைக் கடந்துள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

நாட்டில் கரோனா தொற்றுக்கு பலியானோா் எண்ணிக்கை 80 ஆயிரத்தைக் கடந்தது. பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 49 லட்சத்தைக் கடந்துள்ளது.

இதுதொடா்பாக, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

செவ்வாய்க்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 83,809 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டது. இதனால், நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 49,30,236-ஆக அதிகரித்தது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1,054 போ் கரோனா தொற்றுக்கு உயிரிழந்தனா். இதனால் மொத்த உயிரிழப்பு 80,776-ஆக அதிகரித்தது.

கரோனா தொற்றில் இருந்து இதுவரை 38,59,399 போ் மீண்டுள்ளனா். மொத்த பாதிப்புடன் ஒப்பிடுகையில் இது 78.28 சதவீதமாகும். உயிரிழப்பு விகிதம் 1.64-ஆகக் குறைந்துள்ளது. நாடு முழுவதும் 9,90,061 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். இது, மொத்த பாதிப்பில் 20.08 சதவீதமாகும்.

கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 20 லட்சத்தைக் கடந்திருந்தது. அதைத் தொடா்ந்து, ஆகஸ்ட் 23-ஆம் தேதி 30 லட்சத்தையும், செப்டம்பா் 5-ஆம் தேதி 40 லட்சத்தையும் கடந்தது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐ.சி.எம்..ஆா்.) தகவல்படி, திங்கள்கிழமை வரை மொத்தம் 5,83,12,273 கரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதில், திங்கள்கிழமை மட்டும் 10,72,845 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிப்பில் 2-ஆம் இடத்தில் இந்தியா:

கரோனா பாதிப்பில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. அதே சமயத்தில், உயரிழப்பு எண்ணிக்கையில், அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்தபடியாக 3-ஆவது இடத்தில் இந்தியா உள்ளது.

எனினும், குணமடைவோா் வரிசையில், இந்தியா முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் பிரேசிலும், 3-ஆவது இடத்தில் அமெரிக்காவும் இருப்பதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com