ஆந்திரம்: கனக துர்கா கோயில் தேரில் இருந்த 3 வெள்ளி சிங்கச் சிலைகள் மாயம்

ஆந்திர மாநிலம் இந்திரகீலர்தியில் உள்ள கனக துர்கா கோயிலின் தேரில் இருந்த மூன்று வெள்ளி சிங்கச் சிலைகள் மாயமாகியிருப்பது அந்த மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரம்: கனக துர்கா கோயில் தேரில் இருந்த 3 வெள்ளி சிங்கச் சிலைகள் மாயம்
ஆந்திரம்: கனக துர்கா கோயில் தேரில் இருந்த 3 வெள்ளி சிங்கச் சிலைகள் மாயம்


விஜயவாடா: ஆந்திர மாநிலம் இந்திரகீலர்தியில் உள்ள கனக துர்கா கோயிலின் தேரில் இருந்த மூன்று வெள்ளி சிங்கச் சிலைகள் மாயமாகியிருப்பது அந்த மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, அந்தர்வேதி ஸ்ரீ லஷ்மி நரசிம்ம சுவாமி கோயில் தேர் தீப்பிடித்து எரிந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டது.

இது குறித்த விசாரணையின் போதுதான், கோயில்களில் இருக்கும் தேர்கள் பாதுகாப்பாக இருக்கிறதா, கோயில் சொத்துக்களை கணக்கெடுக்கும் பணி உள்ளிட்டவை நடைபெற்றது. அப்போதுதான் கனகதுர்கா கோயில் தேரில் இருந்த மூன்று வெள்ளி சிங்கச் சிலைகள் மாயமானது தெரிய வந்துள்ளது.

இந்த தேர் சிறப்பு விழாக்களின் போது மட்டுமே வெளியே எடுக்கப்படும். அதுவரை கோயிலின் வாயிலில் உள்ள மகாமண்டபத்தில் பாதுகாப்பாக வைக்கப்படும். இந்த தேரின் நான்கு பக்கத்திலும் நான்கு வெள்ளி சிங்கச் சிலைகள் இருந்தன. அதில் மூன்று சிலைகள் மாயமாகியுள்ளன. ஒன்று சேதப்படுத்தப்பட்டுள்ளது.

தேர் மகாமண்டபத்தில் வைக்கப்பட்டு, காவலாளியை நியமித்திருந்ததாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே, தேர் எரிந்தது குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், தற்போது கோயில் தேரில் சிலைகள் திருடப்பட்டிருப்பது மற்றொரு புயலை கிளப்பியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com