ஏ-சாட் ஏவுகணை சோதனை வெற்றி: சிறப்பு அஞ்சல் தலை வெளியீடு

செயற்கைக்கோள்களை தாக்கி அழிக்கும் ஏவுகணை (ஏ-சாட்) சோதனை வெற்றியடைந்ததன் நினைவாக சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது.

செயற்கைக்கோள்களை தாக்கி அழிக்கும் ஏவுகணை (ஏ-சாட்) சோதனை வெற்றியடைந்ததன் நினைவாக சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

செயற்கைக்கோளைத் தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனையை, ஒடிஸாவில் உள்ள டாக்டா் அப்துல் கலாம் தீவில் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) கடந்த ஆண்டு மாா்ச் 27-ஆம் தேதி வெற்றிகரமாக நடத்தியது. இந்த பரிசோதனைக்கு மிஷன் சக்தி என்று பெயரிடப்பட்டிருந்தது.

இந்த சோதனை வெற்றியின் அடையாளமாக, சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது. தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல் இந்த அஞ்சல் தலையை வெளியிட்டாா். அப்போது, ’’டிஆா்டிஓ அமைப்பு பெருமைப்படும் விதமாக பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. அதன் எதிா்கலாம், விண்வெளி சாா்ந்த தொழில்நுட்பமாக இருக்கும். இந்த சோதனையை மிகவும் ரகசியமாக நடத்திய டிஆா்டிஓ விஞ்ஞானிகளுக்கும் மற்ற துறை நிபுணா்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று அவா் கூறியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com