கரோனா பரவலின் தீவிரத்தை கட்டுப்படுத்திய பொது முடக்கம்

இந்தியாவில் பொது முடக்கத்தால் கரோனா நோய்த்தொற்றுப் பரவலின் தீவிரம் வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டது என
கரோனா பரவலின் தீவிரத்தை கட்டுப்படுத்திய பொது முடக்கம்

இந்தியாவில் பொது முடக்கத்தால் கரோனா நோய்த்தொற்றுப் பரவலின் தீவிரம் வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டது என சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை இணை அமைச்சர் அஸ்வினிகுமார் சௌபே செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
இதுதொடர்பாக மாநிலங்களவையில் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அவர் கூறியது: மார்ச் 25 முதல் மே 31 வரை அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால், கரோனா நோய்த்தொற்றுப் பரவலின் தீவிரம் வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டது. இருப்பினும், பொது முடக்கத்துக்கு பிந்தைய காலகட்டத்தில் நோய்த் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளது. அதேவேளையில், 10 லட்சம் மக்கள்தொகைக்கு 3,328 பாதிப்புகள், 55 உயிரிழப்புகள் என்ற விகிதமானது உலகிலேயே குறைந்த ஒன்று.
கரோனாவை எதிர்கொள்ளும் வகையில் மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்காக சிறந்த அணுகுமுறையை மத்திய சுகாதார அமைச்சகம் பின்பற்றி வருகிறது. நடைமுறையில் உள்ள மற்றும் எதிர்பார்க்கப்படும் நோய்த் தொற்று விகிதத்தின் அடிப்படையில் தனிமைப்படுத்துதல், ஆக்சிஜன் தேவை, தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் ஆகியவற்றை திட்டமிட்டுக் கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
செப். 10}ஆம் தேதி வரையிலான நிலவரப்படி நாட்டில் மொத்தம் 15,290 கரோனா சிகிச்சை மையங்களும், அவற்றில் தனிமைப்படுத்தப்பட்ட 13 லட்சத்து 14 ஆயிரத்து 171 படுக்கைகளும் உள்ளன. மேலும், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 2 லட்சத்து 31 ஆயிரத்து 269 படுக்கைகளும், 62,694 தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகளும் (32,241 செயற்கை சுவாசக் கருவிகளுடன் கூடிய படுக்கைகள் உள்பட) உள்ளன.
இதுவரை 1.39 கோடி முழுப் பாதுகாப்பு உடைகள், 3.42 கோடி என்}95 முகக் கவசங்கள், 10.84 கோடி ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள், 29,779 செயற்கை சுவாசக் கருவிகள், 1 லட்சத்து 2 ஆயிரத்து 400 ஆக்சிஜன் சிலிண்டர்கள் மாநில மற்றும் மத்திய அரசு மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.
கரோனா தொடர்புத் தடம் அறிதல் முறையில் 40 லட்சம் பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். கரோனா பரிசோதனைக்காக 1,697 ஆய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன. நாளொன்றுக்கு 10 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்படுகின்றன. செப். 10 வரை மொத்தம் 5.4 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. 30-க்கு மேற்பட்டோருக்கு சோதனை முறையில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அவர்கள் பல்வேறு மேம்பாட்டு நிலைகளில் உள்ளனர்.
பிரதமர், ஓர் உயர்நிலை அமைச்சர்கள் குழு, அமைச்சரவை செயலர், செயலர்கள் குழு, சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆகியோர் கரோனாவுக்கு எதிரான பொது சுகாதாரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com