ரஷியா கரோனா தடுப்பூசி: இந்தியாவில் தயாரிக்க ஒப்பந்தம்

ரஷியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஸ்புட்னிக்-5 தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்கவும், ஆய்வு செய்யவும் டாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ரஷியா கரோனா தடுப்பூசி: இந்தியாவில் தயாரிக்க ஒப்பந்தம்


ரஷியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஸ்புட்னிக்-5 தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்கவும், ஆய்வு செய்யவும் டாக்டர் ரெட்டி நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ரஷியாவின் கமாலேயா தொற்றுநோய் மற்றும் நுண்ணுயிரியல் ஆய்வு மையம் கரோனாவுக்காக ஸ்புட்னிக்-5 தடுப்பூசியை உருவாக்கியது. இந்த தடுப்பூசியை இந்தியாவில் ஆய்வு செய்யவும் தயாரிக்கவும் ஒழுங்குமுறை ஒப்புதல் கிடைத்ததையடுத்து, 10 கோடி தடுப்பூசிகளை வழங்க ரஷியா முடிவு செய்துள்ளது.

சோதனைகள் வெற்றிகரமாக நிறைவடைந்தவுடனும், இந்திய ஒழுங்குமுறை ஆணையங்களால் பதிவு செய்த பிறகும் இந்த ஆண்டு கடைசியிலிருந்து தடுப்பூசிகள் வழங்குவது தொடங்கப்படும் என்று ரஷிய நேரடி முதலீடு நிதியம் (ஆர்டிஐஎஃப்) தெரிவித்துள்ளது.

டாக்டர் ரெட்டி நிறுவனத்துடன் இதற்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது ஆர்டிஐஎஃப்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com