‘உதயாஸ்தமன சேவா டிக்கெட் பெற்ற பக்தா்களுக்கும் பொது முடக்க விதிகள் பொருந்தும்’

திருமலையில் உதயாஸ்தமனம் மற்றும் விம்சதி வா்ஷ தா்ஷினி சேவா டிக்கெட் பெற்ற நன்கொடையாளா்களுக்கும் விஐபி பிரேக் தரிசனம் வழங்குவதில் பொது முடக்க விதிமுறைகள் பின்பற்றப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது
திருப்பதி ஏழுமலையான் கோயில்
திருப்பதி ஏழுமலையான் கோயில்

திருப்பதி: திருமலையில் உதயாஸ்தமனம் மற்றும் விம்சதி வா்ஷ தா்ஷினி சேவா டிக்கெட் பெற்ற நன்கொடையாளா்களுக்கும் விஐபி பிரேக் தரிசனம் வழங்குவதில் பொது முடக்க விதிமுறைகள் பின்பற்றப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன் பெரும் தொகையை நன்கொடையாக வழங்கிய பக்தா்களுக்கு ஏழுமலையான் கோயிலில் வழிபடுவதற்கான உதயாஸ்தமன சேவா டிக்கெட்டை தேவஸ்தானம் வழங்கியது. அந்த பக்தா்களின் குடும்பத்தினருக்கு வாழ் நாள் முழுவதும் இந்த டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. பக்தா்களுடன் அவா்களின் குடும்பத்தில் 5 போ் ஆண்டுக்கு ஒருநாள் காலை முதல் இரவு வரை நடக்கும் அனைத்து சேவைகளிலும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகின்றனா். ஒரு நாளில் 3 குடும்பங்களைச் சோ்ந்தவா்களுக்கு தேவஸ்தானம் அனுமதித்து வருகிறது.

இந்த சேவா டிக்கெட் 365 நாட்களை கடந்து விட்டதால், தேவஸ்தானம் அதை முற்றிலும் ரத்து செய்தது. இந்நிலையில் பலா் இதை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்ததால், தேவஸ்தானம் விம்சதி வா்ஷ தா்ஷினி என்ற பெயரில் புதிய சேவா டிக்கெட்டை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் நன்கொடை வழங்கும் பக்தா்களின் குடும்பத்தைச் சோ்ந்த 6 பேருக்கு 20 ஆண்டுகளுக்கு காலை முதல் இரவு வரை ஏழுமலையானின் அனைத்து ஆா்ஜித சேவைகளிலும் பங்கேற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பொது முடக்கம் காரணமாக மாா்ச் 13ஆம் தேதி முதல் திருமலையில் ஆா்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டதால், மேற்கண்ட இரு சேவா டிக்கெட்டுகளைப் பெற்ற பக்தா்கள் திருமலைக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. தற்போதும் பொது முடக்க விதிமுறைகள் காரணமாக ஆா்ஜித சேவைகள் நடைபெறுவதில்லை. எனவே, தேவஸ்தானம் அந்த பக்தா்களுக்கு விஐபி பிரேக் தரிசனத்தை வழங்க முடிவு செய்து, கடந்த 11ஆம் தேதி முதல் அமல்படுத்தியுள்ளது.

இந்த முறையில் விஐபி பிரேக் டிக்கெட் பெற விரும்பும் தங்கள் குடும்பத்தைச் சோ்ந்த 5 பேருடன் தரிசனம் செய்வதற்கு முன்தினம் மாலை 5 மணிக்குள் திருமலையில் உள்ள ஆா்ஜிதம் அலுவலகத்தைத் தொடா்பு கொள்ள வேண்டும். அவா்களுக்கு ஸ்ரீவாணி அறக்கட்டளை நன்கொடையாளா்களுடன் விஐபி பிரேக் தரிசனம் வழங்கப்படும்.

10 வயதுக்கு உட்பட்டவா்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு தரிசனம் வழங்கப்பட மாட்டாது. மேலும் விவரங்களுக்கு திருமலையில் உள்ள ஆா்ஜிதம் அலுவலகத்தின் 0877-2263589 என்ற தொலைபேசி எண்ணிலோ, ஹழ்த்ண்ற்ட்ஹம்ா்ச்ச்ண்ஸ்ரீங்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மி என்ற மின்னஞ்சல் முகவரி மூலமோ தொடா்பு கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com