கரோனா உபகரணங்கள் கொள்முதலில் பா.ஜ.க. ஊழல்

உத்தரப்பிரதேசத்தில் கரோனா சிகிச்சைக்கான உபகரணங்கள் கொள்முதலில் பா.ஜ.க. ஊழலில் ஈடுபட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் சிங்

இது குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் சிங், உத்தரப்பிரதேசத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கரோனா உபகரணங்கள் வாங்குவதில் ஊழல் நடைபெற்றுள்ளது.

இது குறித்து சிபிஐ விசாரணை துவக்க வேண்டும். ஊழலுக்கு பின்னால் இருப்பவர்கள் சிறையில் கம்பிகளுக்கு பின்னால் அடைக்கப்பட வேண்டும். கரோனா பெருந்தொற்றிலும் ஊழல் நடைபெற்றுள்ளது. உத்தரப்பிரதேச அரசு மருத்துவ உபகரணத்தில் ஊழல் செய்திருப்பது பா.ஜ.க.விற்கு அவமானகரமானது. என்று கூறினார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கு உத்தரப்பிரதேச மாநில பாஜக தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுதான்ஷூ திரிவேதி மறுப்பு தெரிவித்தார். கரோனா பரவிவரும் நிலையில் மக்கள் நலனுக்காக ஆக்ஸிமீட்டர், தெர்மோ மீட்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் அதிக விலைக்கு வாங்கப்பட்டுள்ளது. என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com