கரோனாவால் விமான நிறுவனங்களின் வருவாய் 85 சதவீதம் சரிவு

கரோனா பாதிப்பால் இந்திய விமான நிறுவனங்களின் வருவாய் ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 85.7 சதவீதம் குறைந்திருப்பதாக சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.
கோப்புப் படம்
கோப்புப் படம்


புது தில்லி: கரோனா பாதிப்பால் இந்திய விமான நிறுவனங்களின் வருவாய் ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 85.7 சதவீதம் குறைந்திருப்பதாக சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.

விமானப் போக்குவரத்துத் துறையில் கரோனா ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்து மாநிலங்களவையில் புதன்கிழமை அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில் அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
2019ஆம் ஆண்டு ஏப்ரல் - ஜூன் காலாண்டில் இந்திய விமான நிறுவனங்களின் வருவாய் ரூ.5,745 கோடியாக இருந்த நிலையில் இந்த ஆண்டு அது வெறும் ரூ.894 கோடியாக குறைந்துள்ளது.
சரக்குப் போக்குவரத்து வருவாயும் ரூ.25,517 கோடியில் இருந்து ரூ.3,651 கோடியாக குறைந்துள்ளது.  ஏர் இந்தியாவின் வருவாய் ரூ.7,066 கோடியில் இருந்து ரூ.1,531 கோடியாக குறைந்துள்ளது.
கடந்த மார்ச் 31 அன்று 67,760 ஆக இருந்த விமான நிலையப் பணியாளர்களின் எண்ணிக்கை ஜூலை 31இல் 64,514 ஆக குறைந்துள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கரோனாவால் மார்ச் 23ஆம் தேதி முதல் சர்வதேச விமானப் போக்குவரத்தும், மார்ச் 25 முதல் உள்நாட்டு விமானப் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டது. அதன் பிறகு மே 25ஆம் தேதி முதல் விமானப் போக்குவரத்து தொடங்கினாலும் குறைந்த அளவிலான விமானங்களே இயக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இந்தியர்களை மீட்டு அழைத்து வர வந்தே பாரத் திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com