வெங்காய ஏற்றுமதிக்கு தடை: என்சிபி, காங்கிரஸ் சாடல்

வெங்காய ஏற்றுமதிக்கு தடை: என்சிபி, காங்கிரஸ் சாடல்

வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளதற்காக மகாராஷ்டிரத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் (என்சிபி), காங்கிரஸ் ஆகியவை மத்திய அரசை சாடியுள்ளன.

மும்பை: வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளதற்காக மகாராஷ்டிரத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் (என்சிபி), காங்கிரஸ் ஆகியவை மத்திய அரசை சாடியுள்ளன.

இதுதொடா்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மாநில துணை முதல்வருமான அஜித் பவாா் கூறுகையில், ‘விவசாயிகள் வெங்காயத்துக்கு நல்ல விலை பெறும் நேரத்தில் அதன் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த நடவடிக்கையே மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிரானது என்பதைக் காட்டுகிறது. கரோனா சூழல் காரணமாக ஏற்கெனவே விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். தற்போது வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிப்பதன் மூலம் மத்திய அரசு அவா்களுக்கு மேலும் நெருக்கடி ஏற்படுத்துகிறது’ என்றாா்.

இதுகுறித்து மகாராஷ்டிர வருவாய்த் துறை அமைச்சரும், மாநில காங்கிரஸ் தலைவருமான பாலாசாஹேப் தோராட் கூறுகையில், ‘ஏற்றுமதி தடை காரணமாக வெங்காயத்தின் விலை சரிந்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள அநீதிக்கு எதிராக காங்கிரஸ் போராடும்.

மகாராஷ்டிரத்தில் புயல், வெள்ளச் சூழலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முடிந்த உதவிகளை மாநில அரசு செய்து வருகிறது. ஆனால் மத்திய அரசு அதற்கு ஒத்துழைக்க மறுக்கிறது. முன்னதாக நாட்டில் ஏற்கெனவே பால் பவுடா் அதிகம் இருந்தும், அதை மேலும் இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்தது. இதனால் பால் விலை சரிந்ததும் குறிப்பிடத்தக்கது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com