வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றம்: மாநில உரிமைகள், கூட்டாட்சி மீதான தாக்குதல் - ப.சிதம்பரம்

நாடாளுமன்றத்தில் வேளாண் மசோதக்கள் நிறைவேற்றி இருப்பது மாநில உரிமைகள் மற்றும் கூட்டாட்சி மீதான தாக்குதல் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கண்டனர் தெரிவித்துள்ளா
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்


புதுதில்லி: நாடாளுமன்றத்தில் வேளாண் மசோதக்கள் நிறைவேற்றி இருப்பது மாநில உரிமைகள் மற்றும் கூட்டாட்சி மீதான தாக்குதல் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கண்டனர் தெரிவித்துள்ளார். 

மத்திய அரசு அறிமுகம் செய்த ‘விவசாயிகளுக்கான உற்பத்தி, வா்த்தகம் மற்றும் வணிகம் மேம்படுத்துதல் மற்றும் வசதி ஏற்படுத்தித் தருதல் சட்ட மசோதா’, ‘விவசாய சேவைகள் மசோதா மற்றும் அத்தியாவசிய பொருள்கள் சட்டத்திருத்த மசோதா’ ஆகிய மசோதாக்களுக்கு எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன.

ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிரோமணி அகாலி தளம் கட்சியும் இதற்கு எதிா்ப்பு தெரிவித்து வருகிறது. 

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்த வேளாண் துறை சாா்ந்த 2 மசோதாக்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில்கள் துறை அமைச்சா் ஹா்சிம்ரத் கெளா் பாதல் தனது பதவியை வியாழக்கிழமை ராஜிநாமா செய்தாா். 

இந்நிலையில், மக்களவையில் வேளாண் மசோதக்கள் நிறைவேற்றி இருப்பது மாநில உரிமைகள் மற்றும் கூட்டாட்சி மீதான தாக்குதல் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கண்டனர் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் சுட்டுரையில் வெளியிட்டுள்ள பதிவில், ஒரு குவிண்டால் நெல்லை ரூ.850 க்கும் விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையாக என்னிடம்  கூறியுள்ளனர். 

குவிண்டால் நெல்லுக்கு குறைந்தபட்சம் ஆதரவு விலையாக ரூ.1,150 நிர்ணயித்துள்ள நிலையில், விவசாயிகள் தனியார் வியாபாரிகளிடம் ரூ.850 க்கு விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது ஏன் இதற்கு மாநில அரசு விளக்கம் அளிக்குமா என கேள்வி எழுப்பியுள்ளார். 

மேலும், இந்த விவகாரத்தில் மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தாமல் நாடாளுமன்றத்தில் வேளாண் மசோதக்கள் நிறைவேற்றி இருப்பது மாநில உரிமைகள் மற்றும் கூட்டாட்சி மீதான மிகப்பெரிய தாக்குதல்.

நிறைவேற்றப்பட்டுள்ள 2 மசோதக்களில் உள்ள மிகப் பெரிய குறைபாடு என்னவென்றால், விவசாயிகள் பெறும் விலை ‘நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆதரவு விடக் குறைவாக இருக்கக்கூடாது’ என்று அவர்கள் விதிக்காதது. 

வேளாண் துறை சாா்ந்த 2 மசோதாக்களுமே நம்முடைய அபூரணமான ‘உணவு பாதுகாப்பு அமைப்பின்’ மூன்று தூண்களுக்கு சவால் விடுகின்றன என்று சிதம்பரம் கூறியுள்ளார். 

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்த வேளாண் துறை சாா்ந்த 2 மசோதாக்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து பஞ்சாப் மற்றும் ஹரியானாவிவசாயிகள் வீதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com