குஜராத்தில் கரோனா நோயாளி மீது மருத்துவமனை ஊழியர்கள் கொலை வெறி தாக்குதல்: வைரலாகும் விடியோ

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள பண்டிட் தீனதயாள் உபாத்யாய் அரசு மருத்துவமனையின் கரோனா பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒரு நோயாளியை தரையில் பிடித்து அழுத்தி கொலை வெறியுடன் தாக்கி மருத்துவமனை ஊழியர்கள்
ராஜ்கோட்  பண்டிட் தீனதயாள் உபாத்யாய் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் பங்கஜ் புச்.
ராஜ்கோட் பண்டிட் தீனதயாள் உபாத்யாய் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் பங்கஜ் புச்.

ராஜ்கோட்: குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள பண்டிட் தீனதயாள் உபாத்யாய் அரசு மருத்துவமனையின் கரோனா பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒரு நோயாளியை தரையில் பிடித்து அழுத்தி கொலை வெறியுடன் தாக்கி மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு ஊழியர்கள் வெளியில் தூக்கி எறியபட்டதாகக் கூறப்படும் விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 

இந்த விடியோ சமூக ஊடக தளங்களில் வைரலாகிய பின்னர், மருத்துவமனை நிர்வாகம்,  நோயாளி "மனநலம் பாதிக்கப்பட்டவர்" என்றும், அவரை கட்டுப்படுத்தப்படுத்துவதற்காகவும், அவரால் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள பிற நோயாளிகளுக்கு ஏற்படும் பாதிப்பை தவிர்ப்பதற்காக சில வாரங்களுக்கு முன்பு அவ்வாறு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் பங்கஜ் புச் கூறுகையில், "சில வாரங்களுக்கு முன்பு பிரபாஷங்கர் பாட்டீல் என்பவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவருக்கு நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளும் உள்ளது தெரியவந்தது.  இந்த நிலையில் அவர் "மனநலம் பாதிக்கப்பட்டவர்" என்று மருத்துவமனையின் மனநலத் துறை அளித்த கருத்தின் படி, அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மருத்துவமனையின் மனநலத் துறை அளித்த கருத்தின் படி, அந்த விடியோ படமாக்கப்பட்ட நேரத்தில், அவருக்கு வெறி ஏற்பட்டதை அடுத்து அவர் அங்கும் இங்குமாக ஓடத் தொடங்கினார். மேலும் தன்னையும் பிற நோயாளிகளையும் தாக்க முயன்றார். பணியில் இருந்த செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் முன் தனது ஆடைகளை அகற்றி, தனக்கும் சக நோயாளிகளுக்கும் பாதிப்பு உண்டாக்கும் விதத்தில் நடந்துகொண்டார். அதைத் தடுத்து நிறுத்துவதற்காக செவிலியர்கள் மற்றும் உதவி மருத்துவர்கள் அவரை அப்படி செய்யக்கூடாது என்று கண்டித்துள்ளனர். ஆனால் அவர் கேட்காமல் வெறியுடன் நடந்து கொண்டார். அதனால் தான் அவரை அப்படி மடக்கி தடுத்து நிறுத்தியதாக டாக்டர் பங்கஜ் புச் தெரிவித்துள்ளார். 

மேலும், மருத்துவமனை ஊழியர்கள் அவரை கட்டுப்படுத்தியதும் மனநலத் துறை மருந்துவர்களின் ஆலோசனைக்கு பின்னர் அவருக்கு மருத்துவர்கள் ஊசி போட்டு சரி செய்ததாகவும், அனைத்து கரோனா நோயாளிகளையும் மருத்துவமனை சிறப்பாக கவனித்து வருகிறது. கரோனா சிகிச்சை பிரிவில் குறைந்தபட்சம் 400 முதல் 500 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாக டாக்டர் பங்கஜ் புச் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com