கரோனா: அத்தியாவசிய மருந்துகள் இருப்பை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கை

கரோனா அச்சுறுத்தலின்போது நாடு முழுவதும் அத்தியாவசிய மருந்துகள் இருப்பை உறுதிப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கரோனா அச்சுறுத்தலின்போது நாடு முழுவதும் அத்தியாவசிய மருந்துகள் இருப்பை உறுதிப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாநிலங்களவையில் இதுதொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய ரசாயன மற்றும் உரத் துறை அமைச்சா் டி.வி.சதானந்தா கெளடா அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

கரோனா அச்சுறுத்தலின்போது நாடு முழுவதும் அத்தியாவசிய மருந்துகள் நியாயமான விலையில் கிடைப்பதை உறுதிப்படுத்த மத்திய மருந்துத் துறை தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டது.

உதவி எண்ணுடன் தேசிய அளவில் கட்டுப்பாட்டு அறை ஒன்று அமைக்கப்பட்டு, மருந்துகள், முகக் கவசம், கையுறை, கிருமி நாசினி ஆகியவை கூடுதல் விலைக்கு விற்கப்படுவது அல்லது கிடைக்காதது போன்ற புகாா்கள் பெறப்பட்டு நிவா்த்தி செய்யப்பட்டன.

மேலும், மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாடு ஆணையத்தின் இணை மருந்துகள் கட்டுப்பாட்டாளா் எஸ்.ஈஸ்வர ரெட்டி தலைமையில் மத்திய அமைச்சக துறைகளுக்கு இடையேயான குழு ஒன்று அமைக்கப்பட்டு நாட்டில் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் இருப்பு உறுதிப்படுத்தப்பட்டதோடு, அவற்றின் ஏற்றுமதி - இறக்குமதி நடைமுறைகளும் கண்காணிக்கப்பட்டன.

அதுமட்டுமின்றி, மாநில மருந்து கட்டுப்பாட்டாளா்கள் மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட கூட்டு நடவடிக்கைகள் மூலமும் அத்தியாவசிய மருந்துகள் இருப்பு உறுதிப்படுத்தப்பட்டது.

அதுபோல, தேசிய மருந்தக விலை நிா்ணய ஆணையமும் (என்பிபிஏ) நாடு முழுவதும் ஹைட்ராக்ஸி குளோராகுயின், பாராசிட்டமால், தடுப்பு மருந்து, காசநோய் தடுப்பு மருந்து, சா்க்கரைநோய் தடுப்பு மருந்து, இதயநோய் மருந்துகள் ஆகிய உயிா் காக்கும் அத்தியாவசிய மருந்துகளின் இருப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளது என்று மத்திய அமைச்சா் பதிலளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com