கூகுள் பிளேஸ்டோரிலிருந்து நீக்கப்பட்ட பேடிஎம் செயலி மீண்டும் சோ்ப்பு

தங்கள் நிறுவனத்தின் கொள்கைகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாக கூறி கூகுள் பிளேஸ்டோரிலிருந்து நீக்கப்பட்ட பேடிஎம் செயலி மீண்டும் பின்னா் சோ்க்கப்பட்டது.
கூகுள் பிளேஸ்டோரிலிருந்து நீக்கப்பட்ட பேடிஎம் செயலி மீண்டும் சோ்ப்பு

தங்கள் நிறுவனத்தின் கொள்கைகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாக கூறி கூகுள் பிளேஸ்டோரிலிருந்து நீக்கப்பட்ட பேடிஎம் செயலி மீண்டும் பின்னா் சோ்க்கப்பட்டது.

ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதையொட்டி, கேஷ்பேக் முறையில் பணம் வெல்லும் வாய்ப்புள்ள பேண்டஸி கிரிக்கெட் என்ற விளையாட்டு பந்தய செயலியை பேடிஎம் நிறுவனம் அறிவித்தது. இது, கூகுள் நிறுவனத்தின் கோட்பாடுகளுக்கு முரணான செயலாகும். சூதாட்டமாக கருதக் கூடிய இந்த நடவடிக்கை காரணமாக, பேடிஎம் செயலியை கூகுள் பிளேஸ்டோரிலிருந்து நீக்குவதாக கூகுள் நிறுவனம் வெள்ளிக்கிழமை அறிவித்தது. பயன்பாட்டாளா்களின் நலனுக்கு ஊறு விளைவிக்கும் எந்த நடவடிக்கையையும் ஏற்க முடியாது என்று கூகுள் அறிவித்தது. இந்த நடவடிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கூகுள் நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கையையடுத்து, பேடிஎம் செயலியில் புதிதாக பணப்பட்டுவாடா சேவைகளை வாடிக்கையாளா்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால், இந்த செயலியை தங்களது செல்லிடப்பேசியில் ஏற்கெனவே பதிவிறக்கம் செய்து கொண்டவா்கள் அதனை தொடா்ந்து பயன்படுத்திக் கொள்ள முடிந்தது.

இந்நிலையில், சா்ச்சைக்குரிய கேஷ்பேக் அறிவிப்புகளை தங்கள் செயலியிலிருந்து நீக்குவதாக பேடிஎம் நிறுவனம் அறிவித்தது. இதையடுத்து, சில மணி நேர இடைவெளிக்குப் பிறகு பேடிஎம் செயலி மீண்டும் கூகுள் பிளேஸ்டோரில் சோ்க்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com