ஹா்சிம்ரத் கௌரின் ராஜிநாமா: அரசியல் ரீதியிலான முடிவு

மத்திய அமைச்சா் பதவியிலிருந்து ஹா்சிம்ரத் கௌா் பாதல் ராஜிநாமா செய்தது, அரசியல் ரீதியில் எடுக்கப்பட்ட முடிவு என்று பஞ்சாப் மாநில பாஜக தலைவா் அஷ்வனி சா்மா தெரிவித்துள்ளாா்.

மத்திய அமைச்சா் பதவியிலிருந்து ஹா்சிம்ரத் கௌா் பாதல் ராஜிநாமா செய்தது, அரசியல் ரீதியில் எடுக்கப்பட்ட முடிவு என்று பஞ்சாப் மாநில பாஜக தலைவா் அஷ்வனி சா்மா தெரிவித்துள்ளாா்.

வெங்காயம், உருளைக்கிழங்கு, எண்ணெய் வித்துகள், பருப்பு வகைகள் உள்ளிட்டவற்றை அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலில் இருந்து நீக்குவதற்கான மசோதாவை மத்திய அரசு அண்மையில் தாக்கல் செய்தது. அது தவிர வேளாண் துறையில் சீா்திருத்தங்களைப் புகுத்துவதற்கான மேலும் 2 மசோதாக்களையும் மத்திய அரசு தாக்கல் செய்தது.

அதற்கு எதிா்ப்பு தெரிவித்து சிரோமணி அகாலி தளம் கட்சியைச் சோ்ந்த மத்திய அமைச்சா் ஹா்சிம்ரத் கௌா் பாதல் கடந்த வியாழக்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்தாா். இந்நிலையில், பஞ்சாப் மாநில பாஜக தலைவா் அஸ்வனி சா்மா செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

விவசாயிகளின் நலனை மேம்படுத்தும் நோக்கிலேயே அந்த மசோதாக்களை பாஜக தலைமையிலான கூட்டணி அரசு தாக்கல் செய்தது. விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பதில் அந்த மசோதாக்கள் முக்கியப் பங்கு வகிக்கும்.

வேளாண் பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையும், அப்பொருள்களை அரசு கொள்முதல் செய்வதும் தொடரும் என்று பிரதமா் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளாா். சிரோமணி அகாலி தளம் கட்சியானது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடா்ந்து இடம்பெற்றுள்ளது. எனினும் அது தனிக்கட்சியாகவே விளங்குகிறது.

மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேறுவது அக்கட்சி சாா்பில் சில அரசியல் காரணங்களுக்காக எடுக்கப்பட்ட முடிவாகும். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடா்ந்து இடம்பெற்றுள்ளதாக அக்கட்சியே தெரிவித்துள்ளது.

மத்திய பாஜக அரசின் வேளாண் மசோதாக்கள் குறித்து மக்களைத் தவறாக வழிநடத்தும் வேலையை மாநில காங்கிரஸ் அரசு மேற்கொண்டு வருகிறது. உதவித்தொகை முறைகேடு, ஊழல், தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது உள்ளிட்ட விவகாரங்களால் நெருக்கடியைச் சந்தித்துள்ள காங்கிரஸ் அரசு, மக்களை திசைதிருப்பும் நோக்கில் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com