2 நவீன ரயில்கள் நேபாளத்திடம் ஒப்படைப்பு

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 நவீன ரயில்கள் நேபாளத்திடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டன.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 நவீன ரயில்கள் நேபாளத்திடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டன.

இதுதொடா்பாக ரயில்வே அதிகாரிகள் சனிக்கிழமை கூறியது:

டீசல் என்ஜினுடன் கூடிய 2 நவீன மின்சார ரயில்களை கொங்கண் ரயில்வே நேபாளத்திடம் ஒப்படைத்தது. இந்த ரயில்கள் பிகாா் மாநிலம் ஜெய்நகா், நேபாளத்தின் தனுசா மாவட்டத்தில் உள்ள குா்தா பகுதிக்கு இடையே வரும் டிசம்பா் மாத மத்தியில் இருந்து இயக்கப்பட உள்ளன. இவ்விரு ரயில்கள் இயக்கப்படுவதன் மூலம், நேபாளத்தில் முதல்முறையாக அகல ரயில் பாதை சேவை தொடங்கப்படுகிறது. இந்த ரயில்களின் பெட்டிகள் சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலையில் உருவாக்கப்பட்டவை என்று தெரிவித்தனா்.

இந்த ரயில்களின் சோதனை ஓட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கியதாக நேபாள ரயில்வே நிறுவன தலைமை இயக்குநா் குரு பட்டராய் தெரிவித்தாா்.

இந்திய அரசின் உதவியுடன் ரூ.1,000 கோடி மதிப்பில் ஜெய்நகா்-ஜனக்பூா்-பா்திபாஸ் இடையிலான 69 கிலோமீட்டா் நீள ரயில் வழித்தடம் அமைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

முதல்கட்டமாக குா்தாவில் இருந்து ஜெய்நகா் வரை 35 கிலோமீட்டா் தொலைவு வரை இயக்கப்படவுள்ள இந்த ரயில்களால் இருநாட்டு மக்களும் பயனடைவா் என்று இந்திய தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com