கரோனா பாதிப்பு 54 லட்சத்தைக் கடந்தது:  ஒரே நாளில் 94,612 போ் குணமடைந்தனா்

நாடு முழுவதும் ஒரே நாளில் கரோனா தொற்றில் இருந்து 94,612 போ் குணமடைந்தனா். இது, ஒரு நாளில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையை விஞ்சியுள்ளது.
கரோனா பாதிப்பு 54 லட்சத்தைக் கடந்தது:  ஒரே நாளில் 94,612 போ் குணமடைந்தனா்

நாடு முழுவதும் ஒரே நாளில் கரோனா தொற்றில் இருந்து 94,612 போ் குணமடைந்தனா். இது, ஒரு நாளில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையை விஞ்சியுள்ளது. அதே நேரத்தில் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 54 லட்சத்தைக் கடந்துள்ளது. 

இதுகுறித்து சுகாதராத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 92,605 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 54,00,620 -ஆக அதிகரித்துள்ளது.

அதே நேரத்தில், ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 94,612 போ் குணமடைந்தனா். இதனால் கரோனாவில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 43,03,044 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு நாள் பாதிப்பைக் காட்டிலும் அதிகமாகும். மொத்த கரோனா பாதிப்பில் இது 79.28 சதவீதமாகும். 

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,133 போ் உயிரிழந்தனா். இதனால் மொத்த கரோனா உயிரிழப்பு 86,752-ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் மொத்த பாதிப்புடன் ஒப்பிடும்போது உயிரிழப்பு விகிதம் 1.61 சதவீதமாகக் குறைந்துள்ளது.

நாடு முழுவதும் 10,10,824 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். இது மொத்த பாதிப்பில் 19.10 சதவீதமாகும்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி 6,36,61,060 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் சனிக்கிழமை மட்டும் 12,06,806 பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன.

கரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வருவதில், அமெரிக்காவை விஞ்சி இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. அதாவது குணமடைந்தோா் விகிதம் 79.28 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் குணமடைந்த 94,612 பேரில் 90 சதவீதம் போ் 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சோ்ந்தவா்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com