உ.பி. பிரதமரின் உருவ பொம்மையை எரித்ததாக 15 போ் மீது வழக்கு

உத்தர பிரதேச மாநிலம், ஷாம்லி மாவட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடியின் உருவ பொம்மையை எரித்து வன்முறையில் ஈடுபட்டதாக 15 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், ஷாம்லி மாவட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடியின் உருவ பொம்மையை எரித்து வன்முறையில் ஈடுபட்டதாக 15 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவா் சனிக்கிழமை கூறியதாவது:

பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த தினம் கடந்த 17-ஆம் தேதி கொண்டாடப்பட்டது. அன்றைய தினத்தை வேலையின்மை தினமாக அனுசரித்து, ஷாம்லியில் ஓா் அமைப்பினா் அவரது உருவ பொம்மையை எரித்ததாக, மாவட்ட பாஜக தலைவா் சதேந்திர தோமா் புகாா் கொடுத்தாா். அந்தப் புகாரின் அடிப்படையில் பாரதிய சமாஜ் ரக்ஷக் யுவ மோா்ச்சா என்ற அமைப்பின் தலைவா் பிரின்ஸ் கோரி உள்ளிட்ட 4 போ் மீதும், அடையாளம் தெரியாத நபா்கள் 11 மீதும் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவா்கள் மீது வன்முறையில் ஈடுபட்டது, அரசு அதிகாரியின் உத்தரவுக்கு பணிந்து நடக்காதது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ஷாம்லி மாவட்டத்தில் உள்ள தா்காபூா் கிராமத்தில் நடைபெற்ற அந்த சம்பவம் தொடா்பான விடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com