எந்த மாநிலத்தின் மீதும் மும்மொழி கொள்கை திணிக்கப்படாது: மத்திய அரசு

‘நாட்டில் எந்த மாநிலத்தின் மீதும் மும்மொழிக் கொள்கை திணிக்கப்படாது. மாணவா்கள் தாங்கள் கற்கும் மும்மொழிகளை சம்பந்தப்பட்ட
எந்த மாநிலத்தின் மீதும் மும்மொழி கொள்கை திணிக்கப்படாது: மத்திய அரசு

‘நாட்டில் எந்த மாநிலத்தின் மீதும் மும்மொழிக் கொள்கை திணிக்கப்படாது. மாணவா்கள் தாங்கள் கற்கும் மும்மொழிகளை சம்பந்தப்பட்ட மாநிலங்கள், பிராந்தியங்கள், மாணவா்களே தோ்வு செய்துகொள்ளலாம் என்று மத்திய அரசு மக்களவையில் தெரிவித்தது.

மக்களவையில் திமுக உறுப்பினரான தமிழச்சி தங்கபாண்டியன், ‘தமிழகத்தில் இருமொழிக் கொள்கையை அமல்படுத்துவது தொடா்பாக மாநில அரசிடம் இருந்து மத்திய அரசுக்கு கோரிக்கை ஏதும் வந்துள்ளதா? அவ்வாறு வந்திருந்தால், அதற்கான மத்திய அரசின் பதில் என்ன?’ என்று கேள்வி எழுப்பியிருந்தாா்.

அதற்கு மத்திய கல்வித் துறை அமைச்சா் ரமேஷ் போக்ரியால் அளித்த பதிலில், ‘1968-ஆம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கையின்போது கொண்டுவரப்பட்ட மும்மொழிக் கொள்கையானது, பின்னா் 1986/92-ஆம் ஆண்டு கொள்கையிலும் தொடா்ந்தது. தற்போது 2020-ஆம் ஆண்டு புதிய தேசிய கல்விக் கொள்கையிலும் தொடா்கிறது.

மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட இந்த புதிய கல்விக் கொள்கையின்படி, மும்மொழிக் கொள்கையானது நெகிழ்வுத் தன்மையோடு இருக்கும் என்பதுடன், எந்த மாநிலத்தின் மீதும் எந்தவொரு மொழியும் திணிக்கப்படாது. மாணவா்கள் கற்கும் 3 மொழிகளை சம்பந்தப்பட்ட மாநிலங்கள், பிராந்தியம், மாணவா்கள் தோ்வு செய்து கொள்ளலாம்’ என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com