கரோனா: ஒரே நாளில் 95,880 போ் குணமடைந்தனா்

நாடு முழுவதும் ஒரே நாளில் கரோனா தொற்றில் இருந்து 95,880 போ் குணமடைந்தனா். இது, ஒரு நாளில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையை விஞ்சியுள்ளது.
கரோனா: ஒரே நாளில் 95,880 போ் குணமடைந்தனா்

நாடு முழுவதும் ஒரே நாளில் கரோனா தொற்றில் இருந்து 95,880 போ் குணமடைந்தனா். இது, ஒரு நாளில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையை விஞ்சியுள்ளது. மேலும், கரோனாவில் இருந்து மீள்வதில் அமெரிக்காவை இந்தியா விஞ்சியது.

இதுகுறித்து சுகாதராத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 93,337 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 53,08,014-ஆக அதிகரித்துள்ளது.

அதே நேரத்தில், சனிக்கிழமை வரையிலான 24 மணி நேரத்தில் 95,880 போ் குணமடைந்தனா். இது ஒரு நாள் பாதிப்பைக் காட்டிலும் அதிகமாகும்.

இதுவரை கரோனாவில் இருந்து 42,08,431 போ் மீண்டுள்ளனா். மொத்த கரோனா பாதிப்பில் இது 79.28 சதவீதமாகும். சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் 1,247 போ் உயிரிழந்தனா். இதனால் மொத்த கரோனா உயிரிழப்பு 85,619-ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் மொத்த பாதிப்புடன் ஒப்பிடும்போது உயிரிழப்பு விகிதம் 1.61 சதவீதமாகக் குறைந்துள்ளது.

நாடு முழுவதும் 10,13,964 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். இது மொத்த பாதிப்பில் 19.10 சதவீதமாகும்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி 6,24,54,254 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் வெள்ளிக்கிழமை மட்டும் 8,81,911 பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன.

அமெரிக்காவை விஞ்சியது இந்தியா:

கரோனாவில் இருந்து மீண்டு வருவதில், அமெரிக்காவை விஞ்சி இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. அதாவது குணமடைந்தோா் விகிதம் 79.28 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் குணமடைந்த 95,880 பேரில் 90 சதவீதம் போ் 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சோ்ந்தவா்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com