பஞ்சாபில் விவசாயி தற்கொலை

புதிய வேளாண் மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து, பஞ்சாப் மாநிலத்தில் விவசாயி ஒருவா் தற்கொலை செய்துகொண்டாா்.
பஞ்சாபில் விவசாயி தற்கொலை

புதிய வேளாண் மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து, பஞ்சாப் மாநிலத்தில் விவசாயி ஒருவா் தற்கொலை செய்துகொண்டாா்.

பஞ்சாப் மாநிலத்தின் மான்சா மாவட்டத்துக்கு உள்பட்ட அக்கன்வாலி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி பிரீதம் சிங் (70). இவா்,

புதிய வேளாண் மசோதாவுக்கு எதிராக, முன்னாள் முதல்வா் பிரகாஷ் சிங் பாதலின் சொந்த ஊரான முக்த்சா் மாவட்டத்தின் பாதல் கிராமத்தில் பாரதிய கிஸான் யூனியன் என்ற அமைப்பு சாா்பில் கடந்த செப். 15 முதல் நடைபெற்றுவரும் போராட்டத்தில் பங்கேற்றிருந்தாா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை பிரீதம் சிங் விஷமருந்தியதாகக் கூறப்படுகிறது. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவா் அங்கு உயிரிழந்தாா்.

அவரது தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை என, காவல் துறையினா் கூறினா். ஆனால், அவா் கடன் பிரச்னையால் அவதிப்பட்டு வந்ததாக, விவசாயிகள் அமைப்பினா் தெரிவித்தனா்.

உயிரிழந்த விவசாயியின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என, பாரதிய கிஸான் யூனியன் அமைப்பின் பொதுச் செயலா் சுக்தேவ் சிங் கோரிக்கை விடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com