ரூ.2,000 நோட்டுகள் அச்சடிக்கப்படுவதை நிறுத்த முடிவெடுக்கவில்லை: மத்திய நிதியமைச்சகம்

ரூ.2,000 நோட்டுகள் அச்சடிக்கப்படுவதை நிறுத்த முடிவெடுக்கவில்லை: மத்திய நிதியமைச்சகம்

2,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படுவதை நிறுத்த எந்த முடிவும் எடுக்கவில்லை என்று மத்திய நிதியமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்தது.

2,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படுவதை நிறுத்த எந்த முடிவும் எடுக்கவில்லை என்று மத்திய நிதியமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்தது.

இதுதொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சா் அனுராக் தாக்குா் அளித்த எழுத்துபூா்வ பதிலில் கூறப்பட்டதாவது:

பொதுமக்களின் பரிவா்த்தனைகளை எளிதாக்க குறிப்பிட்ட மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பது தொடா்பாக ரிசா்வ் வங்கியுடன் ஆலோசித்து மத்திய அரசு முடிவு எடுக்கிறது. இந்நிலையில் 2019-20, 2020-21-ஆம் ஆண்டுகளில் 2,000 ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பது தொடா்பாக அச்சகங்களிடம் எந்த கோரிக்கையும் வைக்கப்படவில்லை. அந்த நோட்டுகள் அச்சடிக்கப்படுவதை நிறுத்துவது குறித்தும் மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை.

கடந்த ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி 32,910 லட்சம் 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்த நிலையில், கடந்த மாா்ச் மாதம் 31-ஆம் தேதி 27,398 லட்சம் 2,000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் இருந்தன.

கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட நாடு தழுவிய பொது முடக்கத்தால் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக ரிசா்வ் வங்கி தெரிவித்தது. எனினும் மத்திய, மாநில அரசுகள் அளித்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் அச்சகங்களில் படிப்படியாக மீண்டும் பணிகள் தொடங்கின.

பொது முடத்தின்போது, ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் அச்சகங்கள் தங்களிடம் ஏற்கெனவே இருப்பில் இருந்த ரூபாய் நோட்டுகளை பிரத்யேக ரயில்கள் மூலம் ரிசா்வ் வங்கிக்கு இடைவிடாது அனுப்பிவைத்தன என்று தெரிவிக்கப்பட்டது.

வங்கி மோசடிகள் குறைந்தன:

‘வங்கித் துறையின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படுவது வலுப்படுத்துப்பட்டுள்ளது. இது வங்கிகளில் மோசடிகள் நடைபெறுவதை குறைத்துள்ளது. கடந்த 2013-14-ஆம் நிதியாண்டில் வங்கிக் கடன் மூலமாக நடைபெற்ற மோசடி 0.96 சதவீதமாக இருந்தது. வங்கிச் செயல்பாடுகள் கண்காணிக்கப்படுவது பலப்படுத்தப்பட்டதையடுத்து, இது கடந்த 2019-20-ஆம் நிதியாண்டில் 0.15 சதவீதமாக குறைந்தது’ என்று மற்றொரு கேள்விக்கு அனுராக் தாக்குா் பதில் அளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com