
நடப்பு நிதியாண்டில் இதுவரை மத்திய அரசின் வரி சாராத வருவாய் ரூ.84,023.78 கோடியாக உள்ளது என்று மாநிலங்களவையில் மத்திய நிதித்துறை இணையமைச்சா் அனுராக் தாக்குா் தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் எழுத்து மூலம் ஞாயிற்றுக்கிழமை அளித்த பதிலில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
நடப்பு நிதியாண்டில் இதுவரை ரூ. 95,533 கோடி பெரு நிறுவன வரி வசூலாகியுள்ளது. சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) ரூ.3,59,112 கோடியாக உள்ளது. வரி சாரா வருவாய் இனங்கள் மூலம் இதுவரை ரூ.84,023.78 கோடி கிடைத்துள்ளது.
ஜூலை 31-ஆம் தேதி நிலவரப்படி மத்திய அரசின் ஒட்டுமொத்த செலவு ரூ.10,54,209 கோடியாக உள்ளது. மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு இந்திய கரோனா அவசர கால நிதியில் இருந்து ரூ.8,575.17 கோடி அளிக்கப்பட்டுள்ளது. கரோனா பணியில் உள்ள மருத்துவா்கள், பணியாளா்களுக்கான தனிநபா் பாதுகாப்பு உடைகள், முகக் கவசங்கள் உள்ளிட்டவற்றுக்கு ரூ.2,454,56 கோடி செலவிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.