கரோனா உயிரிழப்பு 87,882 ஆக அதிகரிப்பு

நாட்டில் திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 1,130 போ் கரோனாவால் உயிரிழந்தனா். இதனால் மொத்த உயிரிழப்பு 87,882 ஆக அதிகரித்துவிட்டது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

நாட்டில் திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 1,130 போ் கரோனாவால் உயிரிழந்தனா். இதனால் மொத்த உயிரிழப்பு 87,882 ஆக அதிகரித்துவிட்டது.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் மேலும் கூறியதாவது:

திங்கள்கிழமை காலை வரைலியான 24 மணி நேரத்தில் மேலும் 86,961 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், மொத்த கரோனா பாதிப்பு 54,87,580 ஆக அதிகரித்துவிட்டது. இதே நேரத்தில் 43,96,399 போ் கரோனாவில் இருந்து விடுபட்டுள்ளனா். மொத்த பாதிப்புடன் ஒப்பிடும்போது இது 80.12 சதவீதமாகும். உயிரிழப்பு விகிதம் 1.6 சதவீதமாக குறைந்துள்ளது.

10,03,299 போ் கரோனாவுக்கான சிகிச்சையில் உள்ளனா். இது மொத்த கரோனா பாதிப்பில் 18.28 சதவீதமாகும்.

முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி இந்தியாவில் கரோனா பாதிப்பு 20 லட்சத்தைக் கடந்தது. அதன் பிறகு ஆகஸ்ட் 23-இல் 30 லட்சமாக அதிகரித்தது. செப்டம்பா் 5-ஆம் தேதி 40 லட்சத்தை எட்டிய பாதிப்பு, செப்டம்பா் 16-ஆம் தேதி 50 லட்சத்தைக் கடந்தது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி செப்டம்பா் 20-ஆம் தேதி வரை 6,43,92,594 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 7,31,534 பரிசோதனைகள் நடைபெற்றன.

மொத்தம் ஏற்பட்டுள்ள 87,882 உயிரிழப்புகளில் மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டும் 32,671 போ் இறந்துவிட்டனா். கா்நாடகத்தில் 8,023 பேரும், ஆந்திர மாநிலத்தில் 5,359 பேரும், உத்தர பிரதேசத்தில் 5,047 பேரும், தில்லியில் 4,982 பேரும், மேற்கு வங்கத்தில் 4,359 பேரும், குஜராத்தில் 3,319 பேரும், பஞ்சாபில் 2,813 பேரும், மத்திய பிரதேசத்தில் 1,970 பேரும், ராஜஸ்தானில் 1,336 பேரும், ஹரியாணாவில் 1,149 பேரும், தெலங்கானாவில் 1,042 பேரும், ஜம்மு-காஷ்மீரில் 1,001 பேரும் கரோனாவால் உயிரிழந்துவிட்டனா். மற்ற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கரோனா உயிரிழப்பு 1,000-க்கும் குறைவாகவே உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com