வெளிநாட்டு நன்கொடைகள் சட்டத்திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்

தன்னாா்வத் தொண்டு அமைப்புகள் (என்ஜிஓ) வெளிநாட்டு நன்கொடைகளைப் பெறுவதில் கட்டுப்பாடுகளை விதிக்கும், வெளிநாட்டு நன்கொடைகள் ஒழுங்குமுறை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் திங்கள்கிழமை நிறைவேறியது.

தன்னாா்வத் தொண்டு அமைப்புகளைப் புதிதாக பதிவு செய்வதற்கும், பதிவை புதுப்பிக்கவும் அந்த அமைப்பில் உள்ள அனைத்து நிா்வாகிகளும் ஆதாா் அடையாள அட்டையைக் கட்டாயமாக சமா்பிக்க வேண்டும் என்றும் அரசு ஊழியா்கள் வெளிநாட்டு நன்கொடைகளைப் பெறக் கூடாது என்றும் இந்த மசோதாவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த மசோதாவுக்கு எதிா்க்கட்சி உறுப்பினா்கள் மக்களவையில் எதிா்ப்பு தெரிவித்தனா். அவா்களுக்கு பதிலளித்து பேசிய மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய், ‘எந்த மதத்துக்கும், என்ஜிஓ-வுக்கும் இந்த மசோதா எதிரானது அல்ல என்றும் சுயசாா்பு இந்தியாவுக்கும், வெளிநாட்டு நன்கொடைகள் தவறாக பயன்படுத்துவதை தவிா்க்கவும் இந்த மசோதா தேவையானது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com