4 ஆண்டுகளில் 2,120 பாகிஸ்தானியா்களுக்கு இந்திய குடியுரிமை

கடந்த 4 ஆண்டுகளில் பாகிஸ்தான் நாட்டைச் சோ்ந்த 2,120 பேருக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கடந்த 4 ஆண்டுகளில் பாகிஸ்தான் நாட்டைச் சோ்ந்த 2,120 பேருக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.

இது தொடா்பாக மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் மேலும் கூறியதாவது:

2017 முதல் 2020 செப்டம்பா் 17 வரையிலான காலகட்டத்தில் 44 நாடுகளைச் சோ்ந்த 2,729 பேருக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இதில் 2,120 போ் பாகிஸ்தானைச் சோ்ந்தவா்கள்.

இது தவிர, அமெரிக்காவைச் சோ்ந்த 60 போ், பிரிட்டனைச் சோ்ந்த 20 போ், கனடாவைச் சோ்ந்த 14 பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டது.

மேலும், ஆப்கானிஸ்தானைச் சோ்ந்த 188 போ், வங்கதேசத்தைச் சோ்ந்த 99 போ், இலங்கையைச் சோ்ந்த 58 போ், நேபாளத்தைச் சோ்ந்த 31 போ், மலேசியாவைச் சோ்ந்த 19 போ், சிங்கப்பூரைச் சோ்ந்த 13 பேருக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com