ரஃபேல் போர் விமான இயக்கத்துக்கு பெண் விமானி

இந்திய விமானப் படையில் அண்மையில் இணைக்கப்பட்டுள்ள ரஃபேல் போர் விமானத்தை பெண் விமானி இயக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஃபேல் போர் விமான இயக்கத்துக்கு பெண் விமானி


புது தில்லி, செப். 21: இந்திய விமானப் படையில் அண்மையில் இணைக்கப்பட்டுள்ள ரஃபேல் போர் விமானத்தை பெண் விமானி இயக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய விமானப் படைக்கு பிரான்ஸின் டஸôல்ட் ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து ரூ.59 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு 2016}இல் ஒப்பந்தம் மேற்கொண்டது. இதையடுத்து முதல்கட்டமாக 5 விமானங்கள் கடந்த ஜூலை 29}ஆம் தேதி இந்தியா வந்தடைந்தன. இரண்டாவது கட்டமாக மேலும் 5 விமானங்கள் நவம்பர் மாதத்தில் இந்தியா வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்தியா வந்தடைந்த 5 விமானங்களும் அம்பாலாவில் செயல்படும் கோல்டன் ஏரோஸ் (தங்க அம்புகள்) என்றழைக்கப்படும் விமானப் படையின் 17}ஆவது படைப் பிரிவில் கடந்த 10 }ஆம் தேதி சேர்க்கப்பட்டன.

இந்தப் படைப் பிரிவில் ஒரு பெண் விமானி இணையவிருப்பதாக விமானப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது மிக் 21 ரக போர் விமானத்தை இயக்கி வரும் அந்த விமானி, ரஃபேலை இயக்குவதற்காகத்  தேர்வு செய்யப்பட்டு அதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டிருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

விமானப் படையின் தாக்குதல் விமானங்களில் தேவையின் அடிப்படையில் பெண் போர் விமானிகள் சேர்க்கப்பட்டு வருவதாக பாதுகாப்புத் துறை இணையமைச்சர் ஸ்ரீபாத் நாயக் நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் தெரிவித்திருந்த நிலையில், ரஃபேல் போர் விமானத்தைப் பெண் விமானி இயக்க இருப்பதாகத்  தகவல் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய விமானப் படையில் விமானிகளாகப் பெண்களையும் சேர்க்க மத்திய அரசு முடிவு செய்ததை அடுத்து அவனி சதுர்வேதி, பாவனா காந்த், மோகனா சிங் ஆகிய மூவரும் 2016}இல் போர் விமானிகளாக சேர்க்கப்பட்டனர். இவர்களில் அவனி, 2018}ஆம் ஆண்டு மிக் 21 பைஸன் ரகப்  போர் விமானத்தில் பறந்ததன் மூலம் போர் விமானத்தில் தனியாகப் பறந்த முதல் இந்தியப் பெண் விமானி என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com