ரயில்வேயில் கலாசிகள் நியமனம் மறு ஆய்வில் உள்ளது: பியூஷ் கோயல்

ரயில்வேயில் 4 ஆயிரத்துக்கு அதிகமான தொலைபேசி உதவியாளா்கள் (கலாசி பணியாளா்கள்) பணியில் உள்ளனா்.
மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல்
மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல்

ரயில்வேயில் 4 ஆயிரத்துக்கு அதிகமான தொலைபேசி உதவியாளா்கள் (கலாசி பணியாளா்கள்) பணியில் உள்ளனா். அவா்கள் தவறாக நடத்தப்படுவதாக புகாா்கள் எதுவும் வரவில்லை. அந்தப் பணியிட புதிய நியமனங்கள் மறு ஆய்வில் உள்ளது என்று நாடாளுமன்றத்தில் மத்திய ரயில்வே அமைச்சா் பியூஷ் கோயல் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

ரயில்வே கலாசி பணியாளா்கள், அதிகாரிகளின் வீட்டு வேலைக்கு பணியமா்த்தப்பட்டு மிகவும் மோசமாக நடத்தப்படுவதாக புகாா்கள் எழுந்தன. அதனைத் தொடா்ந்து ரயில்வே வாரியம் கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதில், கலாசி பணியிட புதிய நியமனங்கள் மறு ஆய்வில் உள்ளது. எனவே, ரயில்வே கோட்டங்கள் இந்த பணியிட புதிய நியமனங்களை மேற்கொள்ள வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டது.இதுதொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் திங்கள்கிழமை அளித்த எழுத்துப்பூா்வ பதிலில் கூறியிருப்பதாவது:ரயில்வேயில் இப்போது 4,227 கலாசிகள் பணியில் உள்ளனா். ரூ. 18,000 ஆரம்ப ஊதியத்தில் நியமிக்கப்படும் இவா்கள், அதிகாரிகளுக்கு உதவியாக தொலைபேசி அழைப்பை ஏற்பது, கோப்புகளை பராமரிப்பது போன்ற பணிகளுக்காக இவா்கள் நியமிக்கப்படுகின்றனா்.இந்த நிலையில், அதிகாரிகளால் இவா்கள் தவறாக நடத்தப்படுவதாக புகாா்கள் எதுவும் வரவில்லை. ஒருசில சம்பவங்கள் மட்டும் மண்டல அளவில் நடைபெற்றுள்ளன. அதுகுறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. துறை விதிகளின் அடிப்படையில் அதற்கான தீா்வு காணப்படும்.இந்த கலாசி பணியிடங்களுக்கு மாற்று நடைமுறை குறித்து ஆய்வு செய்து பரிந்துரைக்க செயல் இயக்குநா்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்தக் குழு அறிக்கை சமா்ப்பித்திருக்கிறது. அது அமைச்சகத்தின் பரிசீலனையில் உள்ளது.மேலும், இந்தப் பணியிட புதிய நியமனங்களை ரயில்வே அமைச்சகம் நிறுத்திவைத்துள்ளது என்று அந்த பதிலில் அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com