காவிரி உள்பட 5 நதிகளை தூய்மைப்படுத்த மத்திய அரசு திட்டம்

கங்கை நதி தூய்மை திட்டம் போலவே நாட்டின் பிற பகுதிகளில் உள்ள நதிகளையும் மாசுபாட்டில் இருந்து மீட்டெடுத்து பொலிவடையச் செய்வதற்கு மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகத் தெரிவித்தது.
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

கங்கை நதி தூய்மை திட்டம் போலவே நாட்டின் பிற பகுதிகளில் உள்ள நதிகளையும் மாசுபாட்டில் இருந்து மீட்டெடுத்து பொலிவடையச் செய்வதற்கு மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகத் தெரிவித்தது.

இதுதொடா்பாக இணையவழி கருத்தரங்கு ஒன்றில் வியாழக்கிழமை பேசிய மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தின் பிரிவான கங்கை நதி தூய்மை திட்டத்தின் (நமாமி கங்கே) தலைமை இயக்குநா் ராஜீவ் ரஞ்சன் மிஸ்ரா, ‘பெரியாறு, காவிரி, கோதாவரி, மகாநதி, நா்மதை ஆகிய 5 நதிகளின் நீா் வளம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். இந்த நதிகளே நாட்டில் அதிக நிலப்பரப்பை கடந்து செல்கின்றன. அந்த நதிகளைச் சாா்ந்த பல்லுயிா்ப்பெருக்கம், கரையோர நகரங்கள், தற்போதய மாசு அளவு உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும்’ என்று தெரிவித்தாா்.

மத்திய ஜல்சக்தி அமைச்சக செயலா் யு.பி.சிங் கூறுகையில், ‘கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்தில் இருந்து பல்வேறு பாடங்கள் கற்கப்பட்டுள்ளன. அவை நாட்டின் பிற பகுதிகளில் உள்ள நதிகளை தூய்மைப்படுத்தும் பணிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கங்கை நதி தூய்மை திட்டம் போலவே நாட்டின் பிற பகுதிகளில் உள்ள நதிகளையும் மாசுபாட்டில் இருந்து மீட்டெடுத்து பொலிவடையச் செய்வதற்கு மத்திய அரசு முயற்சித்து வருகிறது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com