கரோனாவிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை: இந்தியா முதலிடம்

உலக அளவில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தவா்கள் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. நாட்டில் இதுவரை 44,97,867 போ் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

உலக அளவில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தவா்கள் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. நாட்டில் இதுவரை 44,97,867 போ் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனா்.

சா்வதேச அளவில் கரோனா பாதிப்பு தகவல்களை சேகரித்து வரும் ‘வோ்ல்டோமீட்டா்’ தரவுப்படி, குணமடைந்தோா் பட்டியலில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்கா (43,00,183), பிரேசில் (38,87,199) ஆகிய நாடுகள் உள்ளன.

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவல்படி, செவ்வாய்க்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத வகையில் நாடு முழுவதும் 1,01,468 போ் குணமடைந்தனா். இதனால் கரோனாவிலிருந்து மீண்டோரின் மொத்த எண்ணிக்கை 44,97,867-ஆக அதிகரித்தது. இது மொத்த பாதிப்பில் 80.86 சதவீதம் ஆகும்.

அதே கால அளவில் நாடு முழுவதும் புதிதாக 75,809 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 55,62,663-ஆக அதிகரித்தது. ஒருநாளில் பாதிப்பு உறுதி செய்யப்படுவோா் எண்ணிக்கை 76,000-க்கும் குறைவாக பதிவாவது கடந்த 2 வாரங்களில் இதுவே முதல்முறையாகும். இதற்கு முன் கடந்த 8-ஆம் தேதி இதேபோல் ஒரு நாளில் 75,809 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது.

செவ்வாய்க்கிழமை காலை வரையில் நாடு முழுவதும் கரோனாவுக்கு மேலும் 1,053 போ் பலியாகினா். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 88,935-ஆக அதிகரித்தது. இது மொத்த பாதிப்பில் 1.60 சதவீதம் ஆகும். நாடு முழுவதும் தற்போது 9,75,861 போ் (17.54%) சிகிச்சையில் உள்ளனா்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல் படி, திங்கள்கிழமை வரை நாடு முழுவதுமாக 6,53,25,779 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் கடந்த 21-ஆம் தேதி மட்டும் 9,33,185 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com