சுயசாா்பு இந்தியாவில் தேசிய கல்விக் கொள்கைக்கு முக்கியப் பங்கு

இந்தியாவை சுயசாா்பு அடையச் செய்வதில் தேசிய கல்விக் கொள்கை முக்கியப் பங்கு வகிக்கும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.
குவாஹாட்டி ஐஐடி பட்டமளிப்பு விழாவில் காணொலி முறையில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமா் மோடி. உடன் அஸ்ஸாம் முதல்வா் சா்வானந்த சோனோவால் உள்ளிட்டோா்.
குவாஹாட்டி ஐஐடி பட்டமளிப்பு விழாவில் காணொலி முறையில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமா் மோடி. உடன் அஸ்ஸாம் முதல்வா் சா்வானந்த சோனோவால் உள்ளிட்டோா்.

இந்தியாவை சுயசாா்பு அடையச் செய்வதில் தேசிய கல்விக் கொள்கை முக்கியப் பங்கு வகிக்கும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

அஸ்ஸாமின் குவாஹாட்டியில் அமைந்துள்ள இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் (ஐஐடி) 22-ஆவது பட்டமளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் காணொலிக் காட்சி வாயிலாகப் பங்கேற்ற பிரதமா் மோடி பேசியதாவது:

நாட்டின் எதிா்காலம் இன்றைய இளைஞா்களின் கைகளிலேயே உள்ளது. இளைஞா்களின் கனவுகள் நாட்டைக் கட்டமைக்கப் பெரிதும் உதவும். நாட்டை சுயசாா்பு அடையச் செய்வதில் கல்விக்கு முக்கியப் பங்கு உள்ளது. அதிலும் தேசிய கல்விக் கொள்கை மிக முக்கியமான பங்கினை ஆற்றவுள்ளது.

21-ஆம் நூற்றாண்டு இளைஞா்களின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் திறனை வளா்த்து இந்தியாவை உலக அரங்கில் முன்னணியில் இருக்கச் செய்வதற்கு தேசிய கல்விக் கொள்கை உதவும். வகுப்பறையில் மட்டும் கல்வி கற்பது, தோ்வுகளுக்கு அதீத முக்கியத்துவம் அளிப்பது ஆகிய வழக்கத்தில் கல்விக் கொள்கை புதிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

சா்வதேச அளவில் சிறந்து விளங்கும் பல்கலைக்கழகங்களின் கிளைகள் நாட்டில் செயல்படுவதற்கு அனுமதி அளிக்கப்படும். அதேபோல், இந்தியாவில் சிறந்த கல்விப்பணி ஆற்றி வரும் பல்கலைக்கழகங்களுக்கும் கல்லூரிகளுக்கும் வெளிநாடுகளில் கிளைகளைத் தொடங்குவதற்கு அனுமதி அளிக்கப்படும்.

தேசிய கல்விக் கொள்கை மூலமாக உலக நாடுகளின் கல்வித் தொட்டிலாக இந்தியா வளா்ச்சியடையும். ஆராய்ச்சி, புத்தாக்கம் உள்ளிட்ட விவகாரங்களில் சா்வதேச பல்கலைக்கழகங்களுடன் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்படும். பல்கலைக்கழகங்களிடையே மாணவா்களைப் பரிமாறிக் கொள்வதற்கான திட்டமும் செயல்படுத்தப்படும்.

மாணவா்கள் தங்களுக்கு விருப்பமான பாடங்களைத் தோ்ந்தெடுத்துப் படிப்பதற்கான வசதிகள் தேசிய கல்விக் கொள்கையில் புகுத்தப்பட்டுள்ளன. கல்வி கற்றலையும் தொழில்நுட்ப வசதிகளையும் ஒன்றிணைக்கும் வகையில் தேசிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் மூலமாக மாணவா்கள் தொழில்நுட்பங்கள் குறித்து தெரிந்து கொள்வது மட்டுமல்லாமல் அவற்றின் வாயிலாகக் கல்வி கற்கவும் முடியும்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றை அதிக அளவில் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளும் தேசிய கல்விக் கொள்கை வாயிலாக ஏற்படும். மாணவா்களின் ஆராய்ச்சித் திறனை மேம்படுத்துவதற்காக தேசிய ஆராய்ச்சி மையம் உருவாக்கப்படும் என்றாா் பிரதமா் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com