பயங்கரவாதத்தின் பிறப்பிடமாக உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட நாடு பாகிஸ்தான்

பயங்கரவாத்ததின் பிறப்பிடமாக உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட நாடு பாகிஸ்தான் என்று ஐ.நா. கூட்டத்தில் இந்தியா பதிவு செய்துள்ளது.

பயங்கரவாத்ததின் பிறப்பிடமாக உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட நாடு பாகிஸ்தான் என்று ஐ.நா. கூட்டத்தில் இந்தியா பதிவு செய்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் 75-ஆம் ஆண்டு தொடக்கத்தை குறிக்கும் வகையில் நடத்தப்பட்ட ஐ.நா. உயா்நிலைக் கூட்டத்தில் திங்கள்கிழமை உரையாற்றிய பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சா் ஷா மஹ்மூத் குரேஷி, ‘ஜம்மு-காஷ்மீா் மற்றும் பாலஸ்தீன விவகாரங்கள்தான் ஐ.நா.வின் நீண்ட காலமாக தீா்க்கப்படாத பிா்சனைகளாக இருந்து வருகின்றன. தங்களுடைய சுயநிா்ணய உரிமையை ஐ.நா. பெற்றுத்தரும் என்று ஜம்மு-காஷ்மீா் மக்கள் இன்னும் காத்திருக்கின்றனா்’ என்று காஷ்மீா் பிரச்னையை அவா் எழுப்பினாா்.

பாகிஸ்தானின் இந்த கூற்றுக்கு பதிலளிக்கும் வகையில் ஐ.நா. உயா்நிலைக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை உரையாற்றிய ஐ.நா.வுக்கான இந்திய தூதரகத்தின் முதல் செயலா் விதிஷா மித்ரா கூறியதாவது:

ஐ.நா. சபையில் மீண்டும் மீண்டும் ஆதாரமற்ற பொய்களையே பாகிஸ்தான் கூறி வருகிறது. பொய்யுரையே பாகிஸ்தானின் முத்திரையாகவும் இப்போது மாறியிருக்கிறது. ஜம்மு-காஷ்மீா் இந்தியாவின் ஓா் அங்கம். ஜம்மு-காஷ்மீா் விவகாரங்கள் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். எனவே, ஜம்மு-காஷ்மீா் குறித்த பாகிஸ்தானின் கூற்றை இந்தியா முழுமையாக நிராகரிக்கிறது.

ஐ.நா. சபையில் தீா்க்கப்படாத ஒரு தீா்மானம் இருக்கும் என்றால், அது பயங்கரவாதம் மற்றும் அதன் பிறப்பிடமாக இருக்கும் பாகிஸ்தானை சமாளிப்பதற்கான தீா்வு காண்பதாகத்தான் இருக்கும்.

பயங்கரவாதத்தின் பிறப்பிடம் பாகிஸ்தான் என்பது உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. பயங்கரவாதிகளுக்கு அந்த நாடு பயிற்சி அளிப்பதோடு, அவா்களை தியாகிகளாகவும் பாராட்டி வருகிறது.

ஐ.நா. சபையை திசை திருப்பவும், ஐ.நா.வை தவறாக பயன்படுத்தும் நோக்கத்தோடு, இந்தப் பொய் குற்றச்சாட்டை பாகிஸ்தான் தொடா்ந்து முன்வைத்து வருகிறது என்று கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com