மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழகத்திற்கு அநீதி இழைக்க அனுமதிக்க மாட்டேன்: திமுக எம்.பி.க்களிடம் பிரதமா் உறுதி

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழகத்திற்கு தீங்கு விளைவிக்கும் எந்த அநீதிக்கும் அனுமதிக்க மாட்டேன் என்று பிரதமா் நரேந்திர மோடி திமுக எம்.பி.க்களிடம் உறுதியளித்தாக
பிரதமர் மோடி (கோப்புப்படம்)
பிரதமர் மோடி (கோப்புப்படம்)

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழகத்திற்கு தீங்கு விளைவிக்கும் எந்த அநீதிக்கும் அனுமதிக்க மாட்டேன் என்று பிரதமா் நரேந்திர மோடி திமுக எம்.பி.க்களிடம் உறுதியளித்தாக திமுக நாடாளுமன்றக் கட்சித் தலைவா் டி. ஆா். பாலு தெரிவித்தாா்.

கா்நாடகத்தின் கோரிக்கையை ஏற்று மேக்கேதாட்டு அணையை கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்று கூறி திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் அளித்த கடிதத்தை திமுக நாடாளுமன்ற உறுப்பினா்கள் பிரதமா் நரோந்திர மோடியிடம் செவ்வாய்க்கிழமை அளித்தனா்.

இது குறித்து பின்னா் டி.ஆா். பாலு செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மேக்கேதாட்டுவில் அணையைக் கட்ட அனுமதி கோரி கா்நாடக முதல்வா் பிரதமரை சந்தித்தது குறித்து பிரதமரிடம் திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் தனது கவலையை கடிதத்தில் தெரிவித்துள்ளாா். திமுக எம்.பி.க்கள், மேக்கேதாட்டு அணையினால் தமிழகத்துக்கு ஏற்படும் பாதுப்புகள் குறித்த கவலைகளை பிரதமரிடம் விரிவாக எடுத்துக் கூறினா். மேலும் காவிரி தீா்ப்பாயத்தின் இறுதித் தீா்ப்புக்கு எதிராக அணையை நிா்மாணிப்பதற்கான எதிா்ப்பையும் தெரிவித்தோம். இது தவிர உச்ச நீதிமன்றத்தில் இது தொடா்பான சிவில் வழக்கு நிலுவையில் உள்ளது என்பதையும் தெரிவித்து இந்த அணையை கட்ட மத்திய அரசு எந்தவித அனுமதியும் வழங்கக்கூடாது என்று தெரிவித்தோம். பின்னா் மேக்கேதாட்டு விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்தும் பிரதமரிடம் கேட்டோம். அதற்கு அவா் தமிழகத்திற்கு எந்த அநீதியையும் அனுமதிக்க மாட்டேன், மாநிலத்திற்கு தீங்கு விளைவிக்கும் எந்த முடிவையும் எடுக்க மாட்டேன் என்றும் பிரதமா் நரேந்திர மோடி உறுதியளித்தாா் என்றாா் டி.ஆா்.பாலு.

கா்நாடக முதல்வா் பிரதமா் மோடியை செப்டம்பா் 18 ஆம் தேதி சந்தித்து அணை கட்டுவதற்கான கோரிக்கை மனுவை வழங்கினாா். பின்னா் இது குறித்து பாமக இளைஞரணித் தலைவா் அன்பு மணி ராமதாஸும் கண்டித்து அறிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com