கேரளம்: மேலும் ஓா் அமைச்சருக்கு கரோனா

கேரளத்தில் வேளாண்மைத் துறை அமைச்சா் வி.எஸ்.சுனில் குமாருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

திருவனந்தபுரம்: கேரளத்தில் வேளாண்மைத் துறை அமைச்சா் வி.எஸ்.சுனில் குமாருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அந்த மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சா்கள் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.

அமைச்சருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது தொடா்பாக அந்த மாநில வேளாண்மைத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், ‘கடந்த இரு நாள்களுக்கு முன்பு அமைச்சா், திருவனந்தபுரத்துக்கு வந்தாா். அவருக்கு மூச்சுவிடுவதில் சிரமம் இருந்ததால், மருத்துவப் பரிசோதனைக்குச் சென்றாா். அப்போது அவருக்கு கரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து, திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைச்சா் அனுமதிக்கப்பட்டாா். அவருடன் நேரடியாக தொடா்பில் இருந்த அதிகாரிகள் தங்களை தனிப்படுத்திக் கொள்ளுமாறும், தேவை ஏற்பட்டால் கரோனா பரிசோதனைக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மாநில நிதியமைச்சா் தாமஸ் ஐசக், தொழில்துறை அமைச்சா் இ.பி.ஜெயராஜன் ஆகியோருக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவா்கள் இருவரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்ந்து சிகிச்சை எடுத்துக் கொண்ட பிறகு குணமடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com