பங்குச்சந்தை வர்த்தகம் சரிவுடன் நிறைவு

வர்த்தக நேர முடிவில் பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் நிறைவு பெற்றன. நேற்றைய பங்குச்சந்தையுடன் ஒப்பிடும்போது 3 சதவிகிதம் சரிவுடன் வர்த்தகம் நிறைவு பெற்றுள்ளது.
பங்குச்சந்தை வர்த்தகம் சரிவுடன் நிறைவு
பங்குச்சந்தை வர்த்தகம் சரிவுடன் நிறைவு

வர்த்தக நேர முடிவில் பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் நிறைவு பெற்றன. நேற்றைய பங்குச்சந்தையுடன் ஒப்பிடும்போது 3 சதவிகிதம் சரிவுடன் வர்த்தகம் நிறைவு பெற்றுள்ளது.

கரோனா பரவல் நாளுக்கு  நாள் அதிகரித்து வருவதற்கு ஏற்ப பங்குச்சந்தை முதலீடுகள் குறைந்து வர்த்தகம் சரிந்து வருகிறது. வர்த்தகம் இன்று (வியாழக்கிழமை) காலை சரிவுடன் தொடங்கிய நிலையில் ஒவ்வொரு படிநிலையிலும் சரிவையே சந்தித்து வந்தது.

வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,115 புள்ளிகள் குறைந்து 36,553 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவு பெற்றது. 

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 326 புள்ளிகள் சரிந்து 10,805 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவடைந்தது. இது நேற்றைய பங்குச்சந்தையுடன் ஒப்பிடும்போது 3 சதவிகிதம் சரிவாகும்.

உலோகம், தொழில்நுட்பம், ஆட்டோமொபைல், வங்கி என அனைத்துத்துறைகளிலும் வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com