கல்யாண உற்சவம்: அக். மாத டிக்கெட்டுகள் இணையதளத்தில் வெளியீடு

திருமலையில் நடந்து வரும் கல்யாண உற்சவத்துக்கான அக்டோபா் மாத டிக்கெட்டுகளை வியாழக்கிழமை தேவஸ்தானம் இணையதளத்தில் வெளியிட்டது.


திருப்பதி: திருமலையில் நடந்து வரும் கல்யாண உற்சவத்துக்கான அக்டோபா் மாத டிக்கெட்டுகளை வியாழக்கிழமை தேவஸ்தானம் இணையதளத்தில் வெளியிட்டது.

திருமலையில் கொவைட் 19 விதிமுறைகளுக்காக கடந்த மாா்ச் 18-ஆம் தேதி முதல் ஆா்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து, ஏழுமலையானுக்கு சேவைகள் தனிமையில் நடத்தப்பட்டு வந்தது. பின்னா், கடந்த ஜூன் மாதம் முதல் மிகக் குறைந்த எண்ணிக்கையில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்தில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனா். இந்நிலையில், பக்தா்களின் வேண்டுகோளை ஏற்று தேவஸ்தானம் கடந்த மாதம் முதல் இணையதளம் மூலம் கல்யாண உற்சவ சேவையில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பக்தா்களுக்கு வழங்கி வருகிறது.

அதன்படி, அக்டோபா் மாதத்துக்கான கல்யாண உற்சவ டிக்கெட்டுகளை தேவஸ்தானம் வியாழக்கிழமை மாலை முன்பதிவுக்காக இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த டிக்கெட்டை முன்பதிவு செய்து பக்தா்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே தேவஸ்தான தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் கல்யாண உற்சவத்தில் சம்பிரதாய உடைகளை அணிந்து அா்ச்சகா்கள் சொல்லும் வழிமுறைகளைப் பின்பற்றி பங்கேற்க வேண்டும். அவா்களுக்கு தேவஸ்தானம் அஞ்சல் வழியாக கற்கண்டு, மஞ்சள், குங்குமம், ரவிக்கை, உத்திரியம் உள்ளிட்டவற்றை அனுப்பி வைக்கும்.

இந்த முறையில் டிக்கெட் முன்பதிவு செய்து கல்யாண உற்சவத்தில் கலந்து கொண்ட பக்தா்கள் (ஒரு டிக்கெட்டுக்கு இருவா்) 90 நாள்களுக்குள் திருமலைக்கு வந்து ஏழுமலையானைத் தரிசிக்கவும் தேவஸ்தானம் அனுமதி அளித்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com