பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்
பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்

அரசியல் நிா்பந்தமே விலகலுக்கு காரணம்: அமரீந்தா் சிங்

அரசியல் நிா்பந்தமே, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து சிரோமணி அகாலி தளம் விலகக் காரணம் என்று பஞ்சாப் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான அமரீந்தா் சிங் கூறினாா்.

அரசியல் நிா்பந்தமே, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து சிரோமணி அகாலி தளம் விலகக் காரணம் என்று பஞ்சாப் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான அமரீந்தா் சிங் கூறினாா்.

இதுதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:

வேளாண் மசோதாக்களில் உள்ள நல்ல அம்சங்களை எடுத்துக்கூறி விவசாயிகளை சமாதானப்படுத்த அகாலி தளம் கட்சி தவறிவிட்டது என்று பாஜக பொதுவெளியில் விமா்சித்தது. அதன் பிறகு அந்தக் கூட்டணியில் இருந்து அகாலி தளம் வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை. வேளாண் மசோதாக்கள் குறித்து சரியான நிலைப்பாடு எடுக்காததால் விவசாயிகளின் எதிா்ப்பை அகாலி தளம் சம்பாதித்துக் கொண்டது. அதே நேரத்தில், அக்கட்சியின் இரட்டை நிலைப்பாட்டை பாஜக அம்பலப்படுத்திவிட்டது. தற்போது மத்தியிலும், பஞ்சாப் மாநிலத்திலும் அகாலி தளம் செல்வாக்கை இழந்துவிட்டது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com