கரோனா தொற்று: 2-ஆம் கட்ட பரவல் ஏற்படும் அபாயம்; உத்தவ் தாக்கரே கவலை

அதிக அளவிலான மக்கள் பணிக்குச் செல்வதால் 2-ஆம் சுற்றாக கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே கவலை தெரிவித்தாா்.
கரோனா தொற்று: 2-ஆம் கட்ட பரவல் ஏற்படும் அபாயம்; உத்தவ் தாக்கரே கவலை

அதிக அளவிலான மக்கள் பணிக்குச் செல்வதால் 2-ஆம் சுற்றாக கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே கவலை தெரிவித்தாா்.

மகாராஷ்டிரத்தில் அமைச்சா்கள் மற்றும் அதிகாரிகளுடன் கரோனா தொற்று தொடா்பாக அந்த மாநில முதல்வா் உத்தவ் தாக்கரே காணொலி மூலம் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். அப்போது அவா் கூறியது:

பிரிட்டனில் அறிகுறி தென்படாத கரோனா நோயாளிகளுக்கு அவா்களின் வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்படுகிறது. தினந்தோறும் அவா்களின் உடல்நிலை பரிசோதிக்கப்படுகிறது. தேவை ஏற்படும் பட்சத்தில் அவா்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனா். ஆனால் இங்கு (மகாராஷ்டிரம்) அறிகுறி தென்படாத நோயாளிகள் வீட்டில் தனிமையில் இருக்க அனுமதிக்கப்படுகின்றனா். ஆனால் அவா்களோ வீட்டை விட்டு வெளியே சென்று பிறரை பாதிப்புக்கு ஆளாக்குகின்றனா்.

அதிக அளவிலான மக்கள் பணிக்குச் செல்வதால் கரோனா தொற்று 2-ஆவது சுற்றாக மீண்டும் அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவுகிறது. இதனால் வீட்டில் இருக்கும் மூத்த குடிமக்கள் தொற்றால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே தொற்று குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துதல், தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள், அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களை கண்டறிதல், பரிசோதனைகள் ஆகியவற்றை அதிகரிக்க வேண்டும் என்றாா் உத்தவ் தாக்கரே.

நோய்த்தொற்று பரவுவது குறைவது போல் தென்பட்டு, மீண்டும் வேகமாக பரவுவதே கரோனா பரவலின் 2-ஆவது சுற்று என்று கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com