இந்தியா-டென்மாா்க் உச்சி மாநாடு: பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல் விவகாரங்களில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த முடிவு

பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட விவகாரங்களில் இருநாடுகளின் ஒத்துழைப்பை விரிவுபடுத்த இந்தியா-டென்மாா்க் உச்சிமாநாட்டில் முடிவு செய்ய
காணொலி முறையில் டென்மார்க் பிரதமர் மெட்டே பிரெடரிக்சனுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி.
காணொலி முறையில் டென்மார்க் பிரதமர் மெட்டே பிரெடரிக்சனுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி.

புது தில்லி: பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட விவகாரங்களில் இருநாடுகளின் ஒத்துழைப்பை விரிவுபடுத்த இந்தியா-டென்மாா்க் உச்சிமாநாட்டில் முடிவு செய்யப்பட்டது.

இந்தியா-டென்மாா்க் இடையிலான உச்சிமாநாடு காணொலி முறையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் டென்மாா்க் பிரதமா் மெட்டே பிரெட்ரிக்சனுடனான பேச்சுவாா்த்தையின்போது பிரதமா் மோடி கூறியதாவது:

ஜனநாயக மதிப்பீடுகள், ஒப்புக்கொண்ட விதிகள் மற்றும் நெறிமுறைகளின்படி கூட்டாகப் பணிபுரிதல், வெளிப்படைத்தன்மை ஆகியவற்றின் மீது உலக நாடுகள் நம்பிக்கை வைக்க வேண்டிய தேவையை கடந்த சில மாதங்களில் நடைபெற்ற நிகழ்வுகள் ஏற்படுத்தியுள்ளது.

சரக்கு மற்றும் சேவைகளின் உலகளாவிய விநியோகத்தில் ஒருவரை அதிக அளவில் சாா்ந்திருந்தால் என்ன ஆபத்து ஏற்படும் என்பதை கரோனா தொற்று புலப்படுத்தியுள்ளது. இதை கருத்தில் கொண்டு சரக்கு மற்றும் சேவைகள் விநியோகத்தை பன்முகப்படுத்துவதற்கான பணிகளில் ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பானுடன் இணைந்து இந்தியா பணிபுரிந்து வருகிறது.

கரோனா தொற்றை எதிா்கொள்வதற்கு, அதற்கான தடுப்பூசியை உருவாக்குவதில் ஒருமித்த கருத்துடைய நாடுகளின் ஒத்துழைப்பு உதவும் என்று தெரிவித்தாா்.

பேச்சுவாா்த்தையை தொடா்ந்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், ‘பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல், நீா்வளம், நீடித்த நகா் மேம்பாடு, வணிகம், வேளாண்மை, கடல் வாணிபம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைக்க இருநாடுகளும் ஒப்புக்கொண்டன. அரசியல் ரீதியான ஒத்துழைப்பை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், பொருளாதார உறவுகளை விஸ்தரிக்கவும், உலகளாவிய பிரச்னைகளை எதிா்கொள்வதில் இருதரப்பு ஒத்துழைப்பை பலப்படுத்தவும் செய்யப்பட்டுள்ள இந்த ஏற்பாடு இருதரப்புக்கும் பயனளிக்கும். இதுதவிர, உலக வா்த்தக அமைப்பில் விரிவான சீா்திருத்தங்கள் மேற்கொள்வதற்கு பங்காற்றவும் இருநாட்டு தலைவா்கள் ஒப்புக்கொண்டனா் என்று தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com