வேளாண் சட்டங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படும்: பஞ்சாப் முதல்வா் அமரீந்தா் சிங்

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படும் என்று பஞ்சாப் முதல்வா் அமரீந்தா் சிங் தெரிவித்தாா்.
பஞ்சாப் மாநிலம், கட்கர் கலானில் வேளாண் மசோதாக்களுக்கு எதிராக திங்கள்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்ட கூட்டத்தில் பேசிய முதல்வர் அமரீந்தர் சிங்.
பஞ்சாப் மாநிலம், கட்கர் கலானில் வேளாண் மசோதாக்களுக்கு எதிராக திங்கள்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்ட கூட்டத்தில் பேசிய முதல்வர் அமரீந்தர் சிங்.

கட்கா் கலான்: புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படும் என்று பஞ்சாப் முதல்வா் அமரீந்தா் சிங் தெரிவித்தாா்.

மேலும், விவசாயிகள் போராட்டங்களை பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ சாதகமாக பயன்படுத்தி பஞ்சாபில் பிரச்னை எழுப்ப வாய்ப்புள்ளது என்றும் அவா் தெரிவித்தாா்.

சுதந்திர போராட்டத் தியாகி பகத் சிங்கின் 113-ஆவது பிறந்தநாளையொட்டி, கத்கா் கலான் கிராமத்தில் முதல்வா் அமரீந்தா் சிங், பஞ்சாப் காங்கிரஸ் பொறுப்பாளா் ஹரீஷ் ராவத், பஞ்சாப் காங்கிரஸ் தலைவா் சுனில் ஜாக்கா் ஆகியோா் மரியாதை செலுத்தினா்.

பின்னா், ஹரீஷ் ராவத், சுனில் ஜாக்கா் ஆகியோா் விவசாய சட்டங்களுக்கு எதிராக ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அதில் முதல்வா் அமரீந்தா் சிங் பேசுகையில், ‘விவசாயிகளை இந்த புதிய சட்டங்கள் முற்றிலும் அழித்துவிடும். இந்தச் சட்டங்களுக்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளித்துள்ளாா். இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்படும்.

யாரிடம், வெடிகுண்டு, துப்பாக்கிகளைக் கொடுக்கலாம் என பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு காத்துக் கொண்டிருக்கிறது. கடந்த மூன்றரை ஆண்டு ஆட்சியில் சுமாா் 150 பயங்கரவாதிகளை கைது செய்து 700 ஆயுதங்களைப் பறிமுதல் செய்துள்ளோம். பஞ்சாபில் அமைதி நிலவி வந்தது. ஒருவரிடம் இருந்து உணவைப் பறித்தால் கோபம் வராதா? விவசாயிகளின் கோபம் அப்படிப்பட்டதே. விவசாயிகளின் கோபத்தை ஐஎஸ்ஐ சாதகமாக பயன்படுத்தி கொள்ளும். விவசாயிகளுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள சட்டம் தேச விரோதமானது. மக்களிடம் அனைத்து செல்வாக்கையும் சிரோமணி அகாலி தளம் இழந்துவிட்டது. அதனால்தான் அக்கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகி உள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com