பாகிஸ்தானில் 6 மாதங்களுக்குப் பிறகு அனைத்து கல்வி நிறுவனங்களும் திறப்பு

பாகிஸ்தானில் கடந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு இன்று அனைத்து கல்வி நிறுவனங்களும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. 
Pak opens all educational institutions
Pak opens all educational institutions

பாகிஸ்தானில் கடந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு இன்று அனைத்து கல்வி நிறுவனங்களும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. 

கரோனா தொற்று காரணமாக பாகிஸ்தானில் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. தற்போது அந்நாட்டில் பாதிப்பு குறைந்த நிலையில் கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பின்னர் இன்று அனைத்து கல்வி நிறுவனங்களும் திறக்கப்பட்டுள்ளது. 

கடுமையான கட்டுப்பாட்டின் கீழ் தனியார் மற்றும் பொதுப் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. மேலும் கரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த முறையான வழிமுறைகளை ஆசிரியர்களும், மாணவர்களும் பின்பற்றுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். 

இதுகுறித்து கல்வித்துறை அமைச்சர் ஷப்காத் முகமது கூறுகையில், 

கடந்த ஆறு மாதங்களாகக் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்ட நிலையில், தற்போது தொடக்கப் பள்ளிகளில் அதிகபட்ச மாணவர்கள் சேர்த்துள்ளனர்.

கல்வித்துறையில் உள்ள 1,71,436 பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொண்ட நிலையில், அதில் ஒரு சதவீதம் மட்டுமே தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் கடந்த செப்டம்பர் 15-ம் தேதி ஒரு பிரிவின் கீழ் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று அனைத்து கல்வி நிறுவனங்களும் திறக்கப்பட்டது. 

நாட்டில் கரோனா தரவுகளைக் கருத்தில் கொண்டு, தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான வகுப்புகளை மீண்டும் தொடங்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது என்றார். 

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 747 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,12,263-ஐ எட்டியுள்ளது என்று தேசிய சுகாதார சேவைகள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் ஐந்து பேர் பலியானதைத் தொடர்ந்து, இறப்பு எண்ணிக்கை 6,479 ஆகவும், 467 நோயாளிகள் ஆபத்தான நிலையிலும் உள்ளனர். தொற்று பாதித்த 296,881 பேர் முழுமையாகக் குணமடைந்துள்ளனர். ஒரேநாளில் மேலும் 32,031 சோதனைகளை மேற்கொண்டனர். இதுவரை செய்யப்பட்ட மொத்த சோதனைகள் 3,514,237 ஆக உயர்ந்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com