திரையரங்குகளுக்கு மத்திய அரசு அனுமதி: 5-ம் கட்ட தளர்வுகள் அறிவிப்பு

​கரோனா பொது முடக்க 5-ம் கட்ட தளர்வுகளில் அக்டோபர் 15-ம் தேதி முதல் திரையரங்குகள் செயல்பட மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


கரோனா பொது முடக்க 5-ம் கட்ட தளர்வுகளில் அக்டோபர் 15-ம் தேதி முதல் திரையரங்குகள் செயல்பட மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

கரோனா பொது முடக்கத்தின் 5-ம் கட்ட தளர்வுகளை மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது. 

திரையரங்குகள், விளையாட்டு வீரர்களின் பயிற்சிக்காக நீச்சல் குளங்கள், கேளிக்கை பூங்காக்கள் உள்ளிட்டவை அக்டோபர் 15 முதல் மீண்டும் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள் 50 சதவிகித இருக்கைகளுடன் மட்டுமே செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 5-ம் தேதி முதல்  ஹோட்டல்கள், மதுபான விடுதிகள் உள்ளிட்டவை 50 சதவிகித இருக்கைகளுடன் இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் திறப்பது பற்றி அக்டோபர் 15-க்குப் பிறகு பெற்றோர்களின் கருத்தைக் கேட்டறிந்து மாநில அரசுகளே முடிவெடுத்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் அக்டோபர் 31 வரை பொது முடக்கம் கடுமையாகப் பின்பற்றப்படும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com