40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

குஜராத்: மாற்றுத்திறனாளிப் பெண்ணுக்கு பிரதமர் மோடி கடிதம்

குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த 23 வயது மாற்றுத்திறனாளிப் பெண் வந்தனாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பதில் கடிதம் எழுதியுள்ளார்.

News image

குஜராத்: மாற்றுத்திறனாளிப் பெண்ணுக்கு பிரதமர் மோடி கடிதம்

Updated On :7 ஜனவரி 2021, 2:32 pm IST


குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த 23 வயது மாற்றுத்திறனாளிப் பெண் வந்தனாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பதில் கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த தீபாவளிப் பண்டிகையின் போது ரங்கோலியில் பிரதமர் நரேந்திர மோடியின் உருவத்தை வரைந்து பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்திருந்தார் வந்தனா. அவருக்கு பிரதமர் அலுவலகத்திலிருந்து பதில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதில், வாழ்க்கையில் தொடர்ந்து சவால்கள் வந்துகொண்டேதானிருக்கும். ஆனால், எந்த சவாலையும் விட்டுவிடாமல், எதிர்கொண்டு அதை வீழ்த்துவதே உண்மையான வெற்றி என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகத்திலிருந்து பதில் கடிதம் கிடைக்கப்பெற்றதால் வந்தனா மிகுந்த உற்சாகம் அடைந்திருப்பதாக அவரது சகோதரர் கிஷண்பாய் பட்டேல் தெரிவித்துள்ளார்.

தனது சகோதரிக்கு பிறந்தது முதலே காது கேட்பதும், வாய்ப்பேசவும் முடியாமல் போனதாகவும், தற்போது அவர் ஒரு பயிற்சி மையத்தில் சேர்ந்து ஓவியம் கற்று வருவதாகவும்  தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.