தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ஒரேநாளில் 50 ஆயிரத்தைக் கடந்த கரோனா

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 50 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு புதிதாக 251 பேர் உயிரிழந்தனர்.

News image
Updated On :25 மார்ச் 2021, 4:39 am

DIN

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 50 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு புதிதாக 251 பேர் உயிரிழந்தனர்.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

வியாழக் கிழமை காலை 10 மணி நிலவரப்படி, புதிதாக 53,476 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,17,87,534-ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 3,95,192 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணிநேரத்தில் கரோனா தொற்றுக்கு 251 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,60,692-ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக 26,490 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை மொத்தமாக குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,12,31,650 -ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.