5 மாநிலங்களில் 79 சதவீத கரோனா பாதிப்பு: ஒரே நாளில் 53,480 பேருக்கு தொற்று

நாட்டில் 5 மாநிலங்களில் 79 சதவீதத்துக்கும் அதிகமாக கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
novelcoronavirus-optimized080539
novelcoronavirus-optimized080539


புது தில்லி: நாட்டில் 5 மாநிலங்களில் 79 சதவீதத்துக்கும் அதிகமாக கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒரே நாளில் 53,480 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இது தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: மகாராஷ்டிரம், கேரளம், கர்நாடகம், பஞ்சாப், சத்தீஸ்கர்ஆகிய 5 மாநிலங்களில் 79.30 சதவீத கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக 61 சதவீதத்துக்கும் அதிகமான பாதிப்பு மகாராஷ்டிரத்தில் பதிவாகியுள்ளது.
மகாராஷ்டிரம், சத்தீஸ்கர், கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு, குஜராத், பஞ்சாப், மத்திய பிரதேசம் ஆகிய எட்டு மாநிலங்களில் கரோனா தினசரி பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்த மாநிலங்களில் புதிய பாதிப்பு 84.73 சதவீதமாக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 53,480 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1, 21, 49,335}ஆக அதிகரித்துள்ளது. 354 பேர் உயிரிழந்துள்ளனர். 
இது இந்த ஆண்டின் அதிகபட்ச தினசரி உயிரிழப்பாகும். இதனால் நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,62,468}ஆக அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் மீட்பு விகிதம் 94.11 சதவீதமாக குறைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் ராஜஸ்தான், அஸ்ஸாம், ஒடிஸா, மணிப்பூர், திரிபுரா, சிக்கிம், மேகாலயம், மிúஸாரம், நாகாலாந்து, அருணாசல பிரதேசம், லடாக், தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ, லட்சத்தீவுகள், அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகிய பகுதிகளில் கரோனாவால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
புதன்கிழமை காலை வரை நாடு முழுவதும் 6.30 கோடிக்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் இதுவரை 24,36,72,940 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாகவும், செவ்வாய்க்கிழமை மட்டும் 10,22,915 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com