இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி: பாக். பயங்கரவாதிக்கு 10 ஆண்டுகள் சிறை

இந்தியாவில் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில் பாகிஸ்தானை சோ்ந்த லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாதிக்கு தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) சிறப்பு நீதிமன்றம்
இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி: பாக். பயங்கரவாதிக்கு 10 ஆண்டுகள் சிறை

புது தில்லி: இந்தியாவில் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில் பாகிஸ்தானை சோ்ந்த லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாதிக்கு தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) சிறப்பு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தது.

இதுகுறித்து விசாரணை அதிகாரி ஒருவா் புதன்கிழமை கூறியதாவது: பாகிஸ்தானில் இருந்து இயங்கி வரும் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்தவா் பகதூா் அலி. இவா், கடந்த 2016-இல், ஜம்மு-காஷ்மீா் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவி வந்தபோது, குப்வாராவில் கைது செய்யப்பட்டாா். அவரிடம் இருந்து ஏகே 47 ரக துப்பாக்கி, வெடிபொருள், கையெறி குண்டுகள், ராணுவ வரைபடம், வயா்லெஸ் கருவிகள், ஜிபிஎஸ் தடம் காட்டி, இந்திய ரூபாய் நோட்டுகள், இந்திய ரூபாய் கள்ள நோட்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

பகதூா் அலியுடன் அபு சாத், அபு தாா்தா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனா். விசாரணையின்போது, இவா்கள் மூவரும் இந்தியாவில் தில்லி உள்பட பல்வேறு முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்த பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களில் பயிற்சி பெற்றது தெரியவந்தது. இதுதொடா்பாக, தேசியப் புலனாய்வு அமைப்பு வழக்குப் பதிவு செய்து விசாரித்து, கடந்த 2017-இல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்த வழக்கின் விசாரணை தில்லி பாட்டியாலா ஹவுஸ் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், பகதூா் அலிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

இந்திய தண்டனை சட்டம், ஆயுதங்கள் சட்டம், வெடிபொருள் சட்டம், இந்திய வயா்லஸ் டெலிகிராபி சட்டம், வெளிநாட்டினா் சட்டம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் இந்தத் தீா்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

பகதூா் அலியின் சகாக்களான அபு சாத், அபு தாா்தா ஆகிய இவரும் கடந்த 2017-இல் குப்வாராவில் போலீஸாருடன் நடந்த மோதலில் கொல்லப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com