கோவிஷீல்ட் தடுப்பூசி சேமித்து வைக்கும் காலம் 9 மாதங்களாக நீட்டிப்பு: டிசிஜிஐ அனுமதி

இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவிஷீல்ட் கரோனா தடுப்பூசியை சேமித்து வைக்கும் காலத்தை 6 மாதங்களிலிருந்து 9 மாதங்களாக நீட்டித்து இந்திய மருந்துக் கட்டுப்பாடு ஆணையம் (டிசிஜிஐ) அனுமதித்துள்ளது.
கரோனா தடுப்பூசி
கரோனா தடுப்பூசி


புது தில்லி: இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவிஷீல்ட் கரோனா தடுப்பூசியை சேமித்து வைக்கும் காலத்தை 6 மாதங்களிலிருந்து 9 மாதங்களாக நீட்டித்து இந்திய மருந்துக் கட்டுப்பாடு ஆணையம் (டிசிஜிஐ) அனுமதித்துள்ளது.

இந்தியாவில் இந்தத் தடுப்பூசியை தயாரித்து விநியோகம் செய்து வரும் புணேயில் உள்ள சீரம் நிறுவனத்துக்கு கடிதம் மூலம் இதற்கான அனுமதியை இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையா் வி.ஜி.சோமானி அளித்துள்ளாா்.

அந்தக் கடிதத்தில் தெரிவிக்கபப்பட்டிருப்பது: கோவிஷீல்ட் தடுப்பூசியை பெயா் ஒட்டப்படாத 5 மில்லி லிட்டா் உள்ளிட்ட பல்வேறு அளவிலான கண்ணாடி குப்பிகளில் அடைத்து, 9 மாதங்கள் வரை சேமித்து வைக்க அனுமதி அளிக்கப்படுகிறது. அவ்வாறு கூடுதல் காலம் சேமித்துவைக்கப்படும் தடுப்பூசிகள் குறித்த விவரங்களை பிரிவு வாரியாக டிசிஜிஐ அலுவலகத்துக்கும், ஹிமாசல பிரதேசம் கசெளலியில் உள்ள மத்திய மருந்துகள் ஆய்வகத்துக்கும் அனுப்பி வைக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

முன்னதாக, கோவிஷீல்ட் தடுப்பூசியை இரண்டாம் தவணையாக செலுத்திக் கொள்ளும் இடைவெளியை முதல் தவணை செலுத்தியதிலிருந்து 4 முதல் 6 வாரங்கள் என்பதை 6 முதல் 8 வாரங்களாக அதிகரிக்க மாநில அரசுகளை மத்திய சுகாதாரத் துறை அண்மையில் கேட்டுக்கொண்டது. கூடுதல் பலன் கிடைக்கும் என்ற அடிப்படையில் இந்தப் பரிந்துரை செய்யப்படுவதாக மத்திய சுகாதாரத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

அதன் தொடா்ச்சியாக, தடுப்பூசியை சேமித்து வைப்பதற்கான காலத்தை 6 மாதங்கள் என்ற அளவிலிருந்து 9 மாதங்களாக உயா்த்தி டிசிஜிஐ இப்போது அனுமதி அளித்திருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com